முகப்பு /செய்தி /வணிகம் / இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 126-வது நாளாக இன்றும் (செப்டம்பர் 24, 2022) மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

  • Last Updated :
  • Chennai, India

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 126வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவம்வர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்சவிலையாக இருந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கலக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கின.

Also Read: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26ம் தேதி அமைச்சரவை கூட்டம்

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் ரூ.8.22 காசை மத்திய அரசு குறைத்தது.  இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பியே இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால், ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது.

top videos

    இந்நிலையில், தொடர்ந்து 126-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய், டீசல் 94.24 ரூபாய் என விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    First published:

    Tags: Chennai, Petrol Diesel Price