Home /News /business /

இன்றைய (செப்டம்பர் 7-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய (செப்டம்பர் 7-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் 98.96 ரூபாய்க்கும், டீசல் 93.26 ரூபாயக்கும் என விலையில் மாற்றம் இன்றி நேற்றைய அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ. 98.96 ஆகவும், டீசல் 12 காசுகள் குறைந்து ரூ. 93.26 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கியும், சில மாநிலங்களில் 100ஐக் கடந்து விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பால், பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய்கும் கீழ் இருந்து வருகின்றது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுதும் மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மே மாதம் வரையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை தொடர்ந்து மாற்றி அமைத்து வருகின்றன.

    Must Read : வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஜியோ!! - உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து குவியும் வாழ்த்து..

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையைக் குறைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published:

    Tags: News On Instagram, Petrol Diesel Price, Petrol price

    அடுத்த செய்தி