• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் இன்றைய (செப்டம்பர் 6) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் இன்றைய (செப்டம்பர் 6) விலை நிலவரம்

பெட்ரோல் பங்க் (மாதிரி படம்)

பெட்ரோல் பங்க் (மாதிரி படம்)

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Share this:
    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் 98.96 ரூபாய்க்கும், டீசல் 93.26 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ. 98.96 ஆகவும், டீசல் 12 காசுகள் குறைந்து ரூ. 93.26 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய்கும் கீழ் இருந்து வருகிறது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுதும் மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

    Must Read : ஊரக உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

    இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: