Home /News /business /

டிசம்பர் 2: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டிசம்பர் 2: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல்

டெல்லியில் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 10.60 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், மத்திய அரசு நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்தது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 29ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று முதல் ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையில், டெல்லியில் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 10.60 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோலுக்கான வாட் (VAT) என்பது 30 சதவீதமாக இருந்தது. தற்போது இது 19.40 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலமாக பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாய் குறைகிறது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    Must Read : 23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது

    தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 97 காசுகளாகவும், டீசல் விலை 94 ரூபாய் 14 காசுகளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி