Home /News /business /

நவம்பர் 30 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நவம்பர் 30 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்.

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்.

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

    எனினும், கடந்த 27 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

    மத்திய அரசு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, கடந்த 3ஆம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், நவம்பர் 4-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

    Must Read :   ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

    அதனத் தொடர்ந்து, இன்று வரை 27 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் உள்ளது. எரிபொருள் விலை அதிகரித்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், தற்போது வாகன ஓட்டிகளும் பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி