• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நவம்பர் 25 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நவம்பர் 25 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

22 மாநிலங்களில் வாட் வரி குறைப்பு

22 மாநிலங்களில் வாட் வரி குறைப்பு

நவம்பர் 3ஆம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டது. இதனால் அவற்றின் விலை குறைந்தது.

  • Share this:
    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதபன்டி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

    தமிழகத்தில் நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனையானது. நவம்பர் 3ஆம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

    Must Read : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்.... இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 22 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: