Home /News /business /

டிசம்பர் 13 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டிசம்பர் 13 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்

பெட்ரோல்

சென்னையில் பெட்ரோல் விலை 39ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி அதேவிலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி அதேவிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலை ஒரு மாத காலத்திற்கு மேலாக, தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்

    இந்நிலையில், 39ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி