• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு : இன்றைய (அக்டோபர் 27) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு : இன்றைய (அக்டோபர் 27) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 33 பைசாவும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரத் தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 33 பைசாவும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்தியாவில் எதிரொலித்து வருகிறது. அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, நாள்தோறும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    உலக மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன, கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா தனது எண்ணெய் வினியோகத்தை குறைத்துக் கொண்டுள்ளது. கச்சா எண்ணைய் பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இது கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் மிகவும் அதிகமாகும். இதனால், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்துள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிறது.

    Must Read : திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து 104.83 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து 100.92 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: