• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு : இன்றைய (அக்டோபர் 22) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு : இன்றைய (அக்டோபர் 22) நிலவரம்

பெட்ரோல்

பெட்ரோல்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 100ரூபாயை நெருங்கியுள்ளது

  • Share this:
    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 100ரூபாயை நெருங்கியுள்ளது.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 103.61 ரூபாய்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99.56 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 103.92 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிது 99.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    Must Read : விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

    பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: