• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு : இன்றைய (அக்டோபர் 21) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : இன்றைய (அக்டோபர் 21) நிலவரம்

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது, ஒரு லிட்டர் டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 103.31 ரூபாய்கும், டீசல் விலை லிட்டருக்கு 99.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 103.61 ரூபாய்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99.56 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். அந்த வகையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை ஏறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    Must Read : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 30ம் தேதி சைக்கிள் பேரணி - இரா.முத்தரசன் அறிவிப்பு

    மேலும், மத்திய அரசின் அரசின் வரி விதிப்பு தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்று குற்றம் சாட்டிய முத்தரசன், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 30ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: