• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம் (அக்டோபர் 20)

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம் (அக்டோபர் 20)

பெட்ரோல்

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். எரிபொருளின் விலை அதிகரித்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.01 ஆகவும் டீசல் ரூ. 98.92-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.103.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ.99.26க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 85 டாலராக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    Must Read : ரிது குமார் ப்ராண்டின் 52% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்

    இதுதவிர கச்சா எண்ணெய் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் வள நாடுகளுடன் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசி வருவதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: