ஹோம் /நியூஸ் /வணிகம் /

குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள்..!

குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள்..!

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 10.55 சதவீத வட்டியில் ரூ.5 லட்சத்திற்கான தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் போன்ற பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற கடன்களை வாங்குவது நல்ல யோசனை கிடையாது. கடன் பெறுவதற்கு வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே இந்த முறையை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், அதிக வட்டி கொண்ட இந்த வகை கடன்கள் மேலும் உங்கள் கடன் சுமையை ஏற்றி, பொருளாதார இலக்குகளை நோக்கிய உங்கள் பயணங்களுக்கு தடையாக அமைந்துவிடும்.

  எனினும், தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் ஆகிய இரண்டையும் ஒப்பிடும்போது தனிநபர் கடனே கொஞ்சம் சிறப்பானது. ஏனென்றால் கிரெடிட் கார்டு திட்டத்தில் வட்டி விகிதம் 44 சதவீதம் வரை செல்லக் கூடும். இன்றைய சூழலை பொருத்தவரையில், மிகக் குறைவான தனிநபர் கடன் வட்டி என்றால் அது 8.9 சதவீதம் முதல் 10.55 சதவீதம் ஆகும்.

  ஃபேங்க் ஆப் மகாராஷ்டிரம்

  ரூ.5 லட்சத்திற்கான தனிநபர் கடனை 5 ஆண்டுகளுக்கான தவணையில் 8.9 சதவீத வட்டியில் இந்த வங்கி வழங்குகிறது. மாதாந்திர தவணைத் தொகை ரூ.10,355 ஆகும்.

  ஃபேங்க் ஆப் இந்தியா

  பொதுத்துறை வங்கியான ஃபேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கான தனிநபர் கடனுக்கு 9.75 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது. இதற்கான தவணைக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். மாதந்தோறும் ரூ.10,562 செலுத்த வேண்டும்.

  மொபைலில் இனி Truecaller தேவையில்லை... புதிய அப்டேட் அறிமுகம்

  பஞ்சாப் நேஷனல் வங்கி

  மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 9.8 சதவீத வட்டியில் ரூ.5 லட்சத்திற்கான தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. 5 ஆண்டு கால தவணை திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ.10,574 செலுத்த வேண்டும்.

  யெஸ் வங்கி

  தனியார் வங்கியான இங்கு 10 சதவீத வட்டி அடிப்படையில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், அதனை 5 ஆண்டு கால தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மாதாந்திர தவணை தொகை ரூ.10,624 ஆகும்.

  கோடக் மஹிந்திரா வங்கி

  இங்கு 10.5 சதவீத வட்டி அடிப்படையில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ரூ. லட்சம் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ.10,685 திருப்பிச் செலுத்த வேண்டும். மொத்த தவணைக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

  இந்தியன் வங்கி

  பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் ரூ.5 லட்சத்திற்கான தனிநபர் கடனுக்கு 10.3 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது. இதற்கான தவணைக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். மாதந்தோறும் ரூ.10,697 செலுத்த வேண்டும்.

  ஃபெடரல் வங்கி

  தனியார் வங்கியான இங்கு 10.49 சதவீத வட்டி அடிப்படையில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ஐடிஎஃப்சி மற்றும் இந்தஸ்லண்ட் வங்கியிலும் இதே வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், அதனை 5 ஆண்டு கால தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மாதாந்திர தவணை தொகை ரூ.10,744 ஆகும்.

  Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

  எஸ்பிஐ

  இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 10.55 சதவீத வட்டியில் ரூ.5 லட்சத்திற்கான தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. 5 ஆண்டு கால தவணை திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ.10,759 செலுத்த வேண்டும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bank, Personal Loan