ஹோம் /நியூஸ் /வணிகம் /

பர்சனல் லோன் வாங்கும் ப்ளான் இருக்கா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

பர்சனல் லோன் வாங்கும் ப்ளான் இருக்கா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

சிபில் கோரை வைத்து மட்டும் தனிநபர் கடன்களை பல வங்கிகள் வழங்குகின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைய சூழலில் எந்தவொரு பண நெருக்கடி ஏற்பட்டாலும் விரைவாக நமக்குத் தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன். அரசு அல்லது தனியார் ஊழியராக இருந்தாலும்,சுய தொழில் செய்பவர்களாக இருந்தாலும் வங்கிகள் அவர்களுக்குக் கடன்களை வழங்குவதற்கு முன்வருகின்றனர்.

  கல்விக்கானச் செலவு முதல் திருமணம், மருத்துவ செலவுகள் என எல்லாவற்றிற்கும் தனிநபர் கடன்களை வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மற்ற வீட்டுக்கடன், வணிக கடன் போன்ற மற்ற வங்கிக் கடன்களைப் போல இல்லாமல் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் எந்த பொருளையோஅல்லது நிலத்தையோ அடமானம் வைக்கத் தேவையில்லை.

  அதே சமயம், கடன் வாங்க நினைப்பவர்களின் சிபில் ஸ்கோர் என்பது வங்கிக்குத் தேவைப்படும் அளவிற்கு இருப்பது அவசியமான ஒன்று.

  ஹோம் லோன் வாங்கும் ஐடியா இருக்கா? பிரபல வங்கி தரும் இந்த ஆஃபரை யூஸ் பண்ணிக்கோங்க!

  அதாவது தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வங்கி அல்லது வங்கி சாரா நிறுவனங்களில் கடன்களை வாங்கியிருக்கலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் மாத மாதம் வாங்கிய கடன்களுக்காக நீங்கள் கட்டும் இஎம்ஐ தொகையை எக்காரணம் கொண்டும் கட்டாமல் இருக்கக்கூடாது. இவ்வாறு மேற்கொண்டிருந்தால் உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதோடு கடன் கொடுக்க முன்வரும் வங்கிகளும் தனிநபர் கடன் கொடுப்பதற்குத் தயங்குவார்கள்.

  மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! - 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை வருமானம் தரும் திட்டம்!

  எனவே பர்சனல் லோன் மட்டுமில்லை பிற கடன்களை வாங்க முன்வருபவர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். பொதுவாக தனிநபரின் ஸ்கோர் என்பது வங்கி விதிமுறைகளின் படி 750க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

  இவ்வாறு சிபில் கோரை வைத்து மட்டும் தனிநபர் கடன்களை பல வங்கிகள் வழங்குகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 5 லட்சம் வரை தனிநபர் கடன்களுக்கு தற்போது மிகக்குறைந்த வட்டியில் சில வங்கிகள் வழங்குகின்றன. இதோ என்னென்ன வங்கிகள் என்பது? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

  குறைந்த வட்டியில் தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகளின் லிஸ்ட்

  பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 8.9 %

  பஞ்சாப் நேஷனல் வங்கி - 9.8%

  பேங்க் ஆஃப் பரோடா - 10.2%

  கோடக் மஹிந்திரா - 10.25 %

  கனரா வங்கி - 13.15%

  ஆக்சிஸ் வங்கி - 12%

  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 10.70%

  பாரத ஸ்டேட் வங்கி - 10.55%

  HDFC வங்கி - 11%

  இந்தியன் வங்கி - 10.3%

  ஐடிஎஃப்சி வங்கி - 10.49%

  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 11.2%

  மேற்கண்ட வங்கிகள் குறைந்த வட்டியில் தற்போது தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். 5 ஆண்டுகள் நீங்கள் தவணைக்காலமாக வைத்திருந்தால் தான் இந்த வட்டி விகிதம். அதே சமயம் நீங்கள் ரூ 10 லட்சம் வரை தனிநபர்கள் கடன்களை வாங்கும் போது வட்டி விகிதம் சற்று குறையக்கூடும் என்கின்றனர் பொருளாதரா வல்லுநர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Loan app, Personal Loan