தங்க நகைக்கடன் Vs பர்சனல் லோன் - இரண்டில் சிறந்தது எது?

கோப்புப் படம்

கோல்டு லோன் எடுக்க விரும்புவர்களின் புரொபைல் பெரிய அளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

  • Share this:
நெருக்கடியான கால கட்டங்களில் உடனடி பணத்தேவைக்கு கோல்டு லோன் அல்லது பர்சனல் லோன் ஆகிய இரு ஆப்சன்களையே மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இரண்டு லோன்களும் பண தேவை இருப்பவரின் நெருக்கடியை உடனடியாக குறைத்தாலும், இரண்டுக்கும் இடையிலான வட்டி விகிதங்கள் வேறுபட்டவை. கோல்டு லோன் எடுக்கலாமா? பர்சனல் லோன் எடுக்கலாமா? என இருப்பவர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு உகந்த ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வட்டி விகிதம்

பர்சனல் லோன் எடுக்க விரும்புபவராக இருந்தால், உங்களின் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் உடனடியாக பணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைவான தொகை அல்லது கடன் கிடைக்காமலும் போகலாம். வட்டி விகிதங்களை பொறுத்த வரை பர்சனல் லோனில் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டில் இருந்து மட்டுமே தொடங்குகிறது. கடன் வாங்குபவரின் புரொபைலைப் பொறுத்து 7 விழுக்காட்டில் இருந்து 29 விழுக்காடு வரை வட்டி விகிதங்கள் மாறுபடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோல்டு லோன் எடுக்க விரும்புவர்களின் புரொபைல் பெரிய அளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. கடனை திருப்பிச் செலுத்துவதில் மோசமான பின்னணி இருந்தாலும், கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல புரொபைல் வைத்திருப்பவர் என்றால் பர்சனல் லோன் மற்றும் கோல்டு லோன்களுக்கு இடையே உள்ள வட்டி விகிதங்கள் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது.

கடன் தொகை

கடன் தொகையானது கடன் வாங்குபவரின் கிரெடிட் புரொபைலை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. கடந்த காலங்களின் ஒருவர் பெற்ற கடனை திரும்பி செலுத்திய ஆவணங்கள் உள்ளிட்டவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வருமானம், நிலுவையில் இருக்கும் கடன் தொகைகளுக்கு ஏற்ப பர்சனல் லோன் தொகை கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை பர்சனல் லோன் கொடுக்கப்படுகிறது. விதிவிலக்காக சிலருக்கு 40 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

கோல்டு லோன் பொறுத்த வரை கடன் வாங்குபவரின் புரொபைலுக்கு பதிலாக, அடமானம் வைக்கப்படும் நகையின் அளவைப் பொறுத்து மட்டுமே கடன் தொகை தீர்மானிக்கப்படும். நகையின் அளவின் அடிப்படையில் லோன் தீர்மானிக்கப்படுவதால், எதிர்பார்க்கும் தொகை மாறுபடலாம். ஆர்.பி.ஐ விதிகளின்படி நகை மதிப்பீட்டில் 75 விழுக்காடு வரை கடனாக பெற்றுக்கொள்ள முடியும்.

லோன் எப்போது கிடைக்கும்?

பர்சனல் லோனில் ஆவணங்கள் முறையாக சமர்பித்து, வங்கி சார்பில் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் 5 முதல் 7 நாட்களுக்குள் கிடைத்துவிடும். டாப் அப் அல்லது முன்கூட்டியே ஒப்புதல் கொடுக்கப்பட்ட லோன்கள் உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

கோல்டு லோன்கள், நகைகளை சமர்பித்த உடன் உடனடியாக பணத்தை கைகளில் வாங்கிக்கொள்ளலாம். அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும்.

Also read... Gold Rate: மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சேவைக் கட்டணம்

லோன் எடுக்கும்போது சேவைக் கட்டணம், அதாவது புரோசஸிங் பீஸ் வசூலிக்கப்படுவதை கணக்கில் கொள்ள வேண்டும். கோல்டு லோன் பெறுபவர்களுக்கு அதிகபட்சமாக கடன் வாங்கும் தொகையில் இருந்து 2 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும். நகைக்கடன் வழங்குபவர்களில் சிலர் 10 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்பவர்களும் உண்டு. பர்சனல் லோனில் புரொசஸிங் பீஸ் 1 முதல் 3 விழுக்காடு வரை, லோன் தொகையில் இருந்து பிடிக்கப்படும்.

திரும்ப செலுத்தும் கால அளவு

பர்சனல் லோனில் திரும்ப செலுத்தும் கால அளவு 1 முதல் 5 ஆண்டுகள் வரை கொடுக்கப்படுகிறது. சிலருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை தனிநபர் கடனை செலுத்துவதற்கான காலவகாசம் உண்டு. நகைக்கடன் திரும்ப செலுத்தவதற்கான காலவகாசம் 3 ஆண்டுகள் மட்டுமே. நகைக் கடன் வழங்குபவர்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்சம் 4 முதல் 5 ஆண்டுகள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: