ஹோம் /நியூஸ் /வணிகம் /

அவசர தேவைக்கு கடன் வாங்கலாமா? சொத்துக்களை விற்கலாமா? விரிவான அலசல்!

அவசர தேவைக்கு கடன் வாங்கலாமா? சொத்துக்களை விற்கலாமா? விரிவான அலசல்!

கடன் வாங்குதல் அல்லது சொத்துக்களை விற்பது

கடன் வாங்குதல் அல்லது சொத்துக்களை விற்பது

சில பேருக்கு கடன் வாங்குவது சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்ட நபர்கள் இதுபோன்ற நேரங்களில் தனது சொத்துக்களை விற்று அதன் மூலம் செலவுகளை சரி கட்டுவர்.

 • Trending Desk
 • 5 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மிக முக்கியமான காலகட்டத்தில் பெரிய அளவிலான பணம் தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த நேரங்களில் கடன் வாங்குவதா அல்லது ஏற்கனவே நம்மிடம் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து அதன் மூலம் செலவுகளை சரி செய்வதாக என்று குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

  சில பேருக்கு கடன் வாங்குவது சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்ட நபர்கள் இதுபோன்ற நேரங்களில் தனது சொத்துக்களை விற்று அதன் மூலம் செலவுகளை சரி கட்டுவர். இன்னும் சிலரோ கடனை வாங்கி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர். இது சரியா தவறா என்று ஆய்வு செய்து பார்த்தால், அவரவர் சூழ்நிலையை பொறுத்தும், பொருளாதார நிலையினை பொருத்தும் இது நபருக்கு நபர் மாறுபடுகிறது.

  மேலும் நம்மிடம் உள்ள சேமிப்பு பணமும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. சிலருக்கு சொத்துக்கள் அதிகமாக இருக்கும் ஆனால் சேமிப்பு கணக்கிலோ மிக குறைந்த பணமே இருக்கும். இன்னொரு தரப்பினருக்கு சேமிப்பு கணக்கில் பணம் அதிகம் இருக்கும், ஆனால் சொத்துக்கள் மிக குறைவாக இருக்கும். இதில் அவரவருக்கு ஏற்கனவே இருக்கும் கடனின் அளவையும் யோசித்து கணக்கீடு செய்ய வேண்டும்.

  கடன் இருக்கும் போதே, அவசர தேவைக்காக கடன் வாங்கும் போது, அப்போதைக்கும் நிலைமை சரியானது போல் தோன்றினாலும் பிறகு அதனால் மிகபெரிய நெருக்கடி உண்டாகலாம்.

  கடன் வாங்கலாமா அல்லது சொத்துக்களை விற்கலாமா?

  அத்தியாவசிய மற்றும் அவசர கால பணத்தேவை ஏற்படும் போது, சிறிய கணக்கீடுகளின் அடிப்படையில் கடன் வாங்குவது சிறந்ததா? அல்லது சொத்துக்களை விற்பது சிறந்ததா என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.

  123 மாதங்களில் உங்கள் முதலீடு தொகை இரட்டிப்பாகும்... அசத்தல் சிறுசேமிப்பு திட்டம்!

  உதாரணத்திற்கு உங்களிடம் ஐந்து சதவீதம் வட்டி கொடுக்கக்கூடிய வைப்பு நிதி இருக்கும் பட்சத்தில், 12 முதல் 15 சதவிகிதம் வரை வட்டியில் கடன் வாங்குவது சரியாக இருக்காது. இது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் வைப்பு நிதியை பயன்படுத்துவதே சரியான தீர்வாக இருக்கும்.

  ஆனால் இதுவே உங்கள் பணத்தை நீங்கள் சொத்துக்களில் முதலீடு செய்யும் போது அவை அதிக வட்டி அல்லது வருமானம் கொடுக்கும் என்றால் இந்த இடத்தில் யோசித்து முடிவு எடுக்கலாம். ஏனெனில் வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

  உதாரணத்திற்கு சொத்தில் நீங்கள் செய்யும் முதலீடானது 12 முதல் 15 சதவிகிதம் வட்டியை உங்களுக்கு கொடுக்கும் என்று உறுதியாக தெரிந்தால் கண்டிப்பாக இந்தத் தேர்வு தான் சரியானதாக இருக்கும்.

  இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், உங்களுக்கு கிடைக்கும் லாபமானது பெரும்பாலான சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவு இருப்பதில்லை. எப்போதுமே நாம் எதிர்பார்ப்பதை விட குறைந்த அளவு லாபத்தையே பங்குகளின் மூலம் பெற முடியும். ஏதாவது ஒரு அரிய சூழ்நிலையில் மட்டுமே நாம் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை இவை அளிக்கும். பங்குகளாக இருக்கும் பட்சத்தில் அவை நீண்ட கால அடிப்படையில் 12 முதல் 15 சதவீதம் என்ற விகிதத்தில் பணத்தை பெற முடியும். ஆனால் இதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

  8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

  எனவே உங்கள் முதலீடுகள் உங்களுக்கு நன்றாக லாபம் கொடுக்கும் பட்சத்தில், வெளியில் இருந்து கடன் வாங்குவதில் தவறே இல்லை. ஆனால் ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய பிறகு நீங்கள் செய்த முதலீடுகள் சரியான லாபத்தை கொடுக்கவில்லை எனில் உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுகருத்து இல்லை. மேலும் மனரீதியாகவும் உங்களை வெகுவாக பாதிக்கலாம்..

  பணத்தின் மதிப்பு / சொத்தின் மதிப்பு:

  தேவைப்படும் பணத்தை திரட்டுவதற்கு நம்மிடம் எவ்வளவு கால இடைவெளி உள்ளது என்பதும், நாம் விற்பதற்கு தயாராக இருக்கும் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பதையும் முதலில் கணக்கில் கொள்ள வேண்டும்.

  உதாரணத்திற்கு குடும்பத்திற்கான அவசரகால சூழ்நிலையில் 10 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்களிடம் 15 லட்ச ரூபாய் மதிப்புடைய நிலம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உங்களின் தேர்வு எதுவாக இருக்கும்? நிலத்தை விற்பதாக நீங்கள் முடிவு செய்தால், அது மிக பெரிய தவறான முடிவாகவே அமையும். ஏனெனில் ஒரு நிலத்தை விற்பது என்பது நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் செயல். மேலும் அவசர நிலையில் உங்கள் தேவையை அறிந்து கொண்ட பலர் அதை மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுக்கும். இந்த சூழ்நிலையில் நீங்கள் வெளியே கடன் வாங்குவதில் சரியான முடிவாக இருக்கும். ஏனெனில் நிலத்தின் மதிப்பு காலம் செல்ல செல்ல உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் தாமதமாக விற்பனை செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு நிலம் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும்.

  கடன் வாங்கிய பிறகு கூட நிலத்தை பொறுமையாக அதிக விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம். மேலும் நிலத்தை அதிக விலைக்கு விற்றதால் உங்களிடம் மீதம் இருக்கும் பணத்தை வேறு ஏதேனும் வழிகளில் முதலீடு செய்வதோ அல்லது சேமிப்பு கணக்கில் கூட வைத்துக் கொள்ளலாம்.

  மற்றொரு சூழ்நிலையில் உங்களுக்கு 4 லட்சம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அதுபோன்ற சூழ்நிலையில் உங்களின் சேமிப்பு கணக்கை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. ஏனெனில் இது போன்ற சிறிய தொகைக்கு நீங்கள் கடன் வாங்கினால் அவற்றுடன் வட்டி சேர்ந்து நாளடைவில் மிகப்பெரும் தொகையை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டி இருக்கலாம். எனவே இதுபோன்ற சமயங்களில் உங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

  ஒட்டுமொத்தமாக தேவைப்படும் பணமானது நம்மிடம் இருக்கும் சொத்து மதிப்பை விட சிறியதாக இருந்தால், அந்த சமயத்தில் கடன் வாங்குவது சரியான தீர்வாக இருக்கும்.

  ஏனெனில் சொத்துக்களை அவசர கதியில் விற்க போது குறைந்த விலையில் விற்க நேருவதுடன் தேவையற்ற வரிகளையும் செலுத்த வேண்டி இருக்கும். இவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் நாம் எதிர்பார்ப்பதை விட மிகக் குறைந்த தொகையே சொத்துக்களை விற்ற பிறகும் கூட நம்மிடம் எஞ்சி இருக்கும்.

  அவசரகால சேமிப்பை பயன்படுத்தலாம்:

  இதைப் பற்றி நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கலாம். நம்முடைய வருமானத்தில் ஒரு பகுதியை வாழ்க்கையில் எப்போதாவது அவசர நிலை ஏற்பட்டால் அப்போது பயன்படுத்திக்கொள்ள சேமித்து வைப்பது அவசர கால சேமிப்பு நிதி எனப்படும்.

  இது மருத்துவ செலவாவோ, ஏதேனும் கடன், அல்லது சொத்துக்களை வாங்குவது, திடீரென்று ஏற்படும் எதிர்பாராத செலவுகள் என்று எது வேண்டுமானாலும் சூழ்நிலையை பொறுத்து மாறுபடலாம். உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படும் பட்சத்தில் கடன் வாங்குவதும் சொத்துக்களை விற்பதையும் பற்றி யோசித்து முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், இந்த அவசரகால சேமிப்பை பயன்படுத்துவதை பற்றி யோசித்துப் பார்க்கலாம். இந்த அவசரகால சேமிப்பை ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் திடீரென்று ஏற்படும் செலவுகளால் உண்டாகும் பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடியும்.

  ஒருவேளை உங்களிடம் அப்படி எதுவும் அவசர கால சேமிப்பு பணம் எதுவும் இல்லை என்ற பட்சத்தில் திடீரென்று ஏதேனும் எதிர்பாராத அசம்பாவிதங்களால் பணம் தேவைப்பட்டால் வெளியில் கடன் வாங்குவதும் அல்லது சொத்துக்களை விற்பதை தவிர வேறு வழியில்லை. எப்படி பார்த்தாலும் அது நஷ்டத்தில் தான் முடியும். எனவே அவசரகால சேமிப்பு மிக மிக முக்கியம்.

  ஒட்டு மொத்தமாக பார்த்தால் அவசர காலத்தில் கடன் வாங்குவது என்று முடிவெடுத்து விட்டால் ஆன்லைனில் பல்வேறு முறைகளில் கடன் பெற முடியும். கடனை பெற்றுக் கொண்டு கூட பின்னர் நமது சொத்துக்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கடனை திருப்பி செலுத்தி கொள்ளலாம். ஏற்கனவே கடன் இருக்கும் பட்சத்தில் சொத்துக்களை விற்பதை தவிர வேறு வழி இல்லை. சொத்துக்களை விற்பதோ கடன் வாங்குவதோ அல்லது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதோ, எதுவாக இருந்தாலும் உங்களது சூழ்நிலையையும் வாய்ப்புகளையும் சரி பார்த்துக் கொண்டு மேலே கூறிய காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எதை செய்தால் நான் உங்களுக்கு லாபம் கிடைக்குமோ அல்லது நஷ்டம் ஏற்படாதோ அந்த முறையை தேர்ந்தெடுப்பது நல்லது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank Loan, Business, Home Loan