முகப்பு /செய்தி /வணிகம் / Personal Loan vs Credit Card | பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு - எது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?

Personal Loan vs Credit Card | பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு - எது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?

காட்சி படம்

காட்சி படம்

Personal Loan vs Credit Card | முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கிரெடிட் மார்க்கெட் பெருகியுள்ளது. நிதி சார்ந்த சேவைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் அனைவரும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

நம் வருமானத்தை காட்டிலும் பல சந்தர்பங்களிலும் பண தேவை அதிகமாக இருக்கும். உள்நாட்டு சுற்றுலா செலவு, திருமண நிகழ்வு, புதியதொரு பொருட்களை வாங்குவது அல்லது வீட்டை புதுப்பிப்பது போன்ற காரணங்களால் நமக்கு பணம் கூடுதலாக தேவைப்படும்.

இத்தகைய சூழலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கிரெடிட் மார்க்கெட் பெருகியுள்ளது. நிதி சார்ந்த சேவைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் அனைவரும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன.

கிரெடிட் கார்டு vs பெர்சனல் லோன்

நமது பணப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு கிரெடிட் கார்டு அல்லது பெர்சனல் லோன் என்பது உபயோகமாக இருக்கிறது. அதே சமயம், நாம் எந்த அளவுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தும் திறனுடன் இருக்கிறோம், பணத்தின் தேவை என்பதை எல்லாம் பரிசீலனை செய்து கடன் வழங்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு மற்றும் பெர்சனல் லோன் ஆகியவற்றின் கட்டமைப்புகள் வெவ்வேறானவை என்றாலும் கூட, அவை இரண்டுமே அன்-செக்யூர்டு கிரெடிட் வசதியை கொண்டவை. கிரெடிட் கார்டு என்பது நீங்கள் தவணைத் தொகைக்கு முன்பாக பணத்தை திருப்பிச் செலுத்த, செலுத்த மேற்கொண்டு கிரெடிட் பெற்றுக் கொள்ளலாம்.

அதே சமயம், பெர்சனல் லோன் திட்டத்தில் ஒரே சமயத்தில் பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கும். கடன் பெறுபவர் மற்றும் கடன் வழங்குநர் ஆகிய இருவருக்கும் இடையே, கடன் வழங்குவதற்கு முன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

also read : வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஹோம் லோன் வாங்கலாமா?

பணத் தேவையின் வேறுபாடு

ஒரு வெளிநாட்டு சுற்றுலா, விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோன், வீடு புதுப்பிப்பு போன்ற தேவைகளுக்காக ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் கடன் தேவைப்படுகிறது என்றால், அந்த நபரின் மாத வருமானம் ரூ.80,000 ஆக இருக்க வேண்டும்.

இப்போது மிக குறைவான அளவில் உங்களுக்கு பணத் தேவை இருக்கிறது. அதாவது விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவு, வீட்டுக்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்குவது போன்ற தேவைகளுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாதாந்திர தவணை முறை

கிரெடிட் கார்டு மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை மாதாந்திர தவணைகளாகப் பிரித்து நீங்கள் திருப்பிச் செலுத்திக் கொள்ளலாம். சில வங்கிகளில் பெரிய அளவுக்கான தொகை என்றாலும் பிராசஸிங் கட்டணம் எதுவும் இன்றி சிறு தவணைகளாக திருப்பி வசூல் செய்யப்படுகிறது.

also read : கிரெடிட் கார்டு பில் அதிகமாக வருகிறதா? இனி இந்த தப்பை செய்யாதீர்கள்!

உதாரணத்திற்கு, ஹோட்டல் முன்பதிவு மற்றும் விமானப் பயணக் கட்டணம் போன்றவற்றுக்காக உங்களுக்கு ரூ.2.5 லட்சம் செலவாகியிருக்கிறது என்றால், அதை நீங்கள் 24 மாத தவணையோடு திருப்பிச் செலுத்தும்போது 14 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும். அப்போது மாதாந்திர தவணை தொகை என்பது ரூ.12,003 என்ற அளவில் வரும்.

also read :கோடைகால சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்கிறீர்களா? இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்கள்..

பெர்சனல் லோன் வட்டி விகிதம்

பெர்சனல் லோன் முறையில் ஆண்டுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையில் வட்டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு தனிநபர் இரண்டு ஆண்டுகளுக்கான தவணையில் 14 சதவீத வட்டியுடன் ரூ.5 லட்சம் கடன் பெற்றிருக்கிறார் என்றால், அவருக்கான மாதாந்திர தவணை தொகை ரூ.24,006 ஆகும்.

எது சிறந்தது

ஏற்கனவே உள்ள கடன் அளவு, திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் தேவையின் அடிப்படை ஆகியவற்றை பொறுத்து கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவதா அல்லது பெர்சனல் லோன் பெறுவதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.

First published:

Tags: Credit Card, Loan, Personal Loan