உங்களிடம் என்னென்ன தகுதிகள் இருந்தால் வங்கியில் பர்சனல் லோன் உடனே கொடுக்கப்படும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வங்கியில் ஈஸியாக பர்சனல் லோன் கிடைக்கும் என வாயில் வந்தது போல் சொன்னாலும் அது உண்மை கிடையாது. ஏகப்பட்ட சலுகைகள், ஸ்பெஷல் ஆஃபர்கள், விழாக்கால தள்ளுபடிகள் என ஏகப்பட்டவை வந்தாலும் வங்கியில் பர்சனல் லோன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. சில முக்கியமான தகுதிகள் இருந்தால் மட்டுமே முதலில் சில வங்கிகள் பர்சனல் லோனுக்கு செயல்படுத்தவே தொடங்கும். அது என்னென்ன என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் பர்சனல் லோன் எடுப்பதாக முடிவு எடுத்தவுடன் நீங்கள் அப்ளை செய்ய நினைக்கும் வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது என்ற தகவலை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஆவணங்கள் மூலம் அப்ளை செய்யுங்கள். நீங்கள் வாங்கும் கடனுக்கு எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அதே போல் KYC மற்றும் வருமானம் தொடர்பான சில ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். பர்சனல் லோன் முதல் தகுதியே இதுதான்.
ஒருவேளை இவை சரியாக இருந்தாலே போதும் பர்சனல் லோனுக்கு அப்ளை செய்த மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் அனைத்து வகையான சரிபார்ப்பு மற்றும் கடன்களுக்கான ஒப்புதலும் உங்களுக்கு கிடைத்துவிடும். அடுத்ததாக சிபில் ஸ்கோர் மிக மிக முக்கியம். உங்களின் சிபில் ஸ்கோர் வங்கி தரப்பிலிருந்து மதிப்பிடப்படும். இதற்கு முன்பு வாங்கிய லோன் அல்லது கிரேடிட் கார்டு கடன்களை சரியாக செலுத்தியுள்ளீர்களா என கவனிக்கப்படும். பர்சனல் லோனுக்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள அறிக்கை அதாவது வேலை செய்யும் நிறுவனத்தின் பே சிலிப், வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவற்றை ஆவணங்களாக வழங்க வேண்டும். மேலும் அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்க ஆவணங்கள் மற்றும் பான் கார்டு போன்றவை தேவைப்படும். நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், அதற்கான ஆவணத்தையும் வழங்க வேண்டும். இவை எல்லாமே சரியாக இருந்தால் போதும் லாகின் செய்த 2 நாட்களில் பர்சனல் லோன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.