Home /News /business /

பர்சனல் லோனில் கலக்கும் வங்கிகள்.. 5 லட்சம் வாங்குனா வட்டி எவ்வளவு தெரியுமா?

பர்சனல் லோனில் கலக்கும் வங்கிகள்.. 5 லட்சம் வாங்குனா வட்டி எவ்வளவு தெரியுமா?

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

பர்சனல் லோனில் வங்கிகள் வழங்கும் வட்டி மற்றும் மாத தவணைக் குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

    உங்களின் அவசர தேவைக்கு பர்சனல் லோன் முடிவு என்றால் அதில் விதிக்கப்படும் வட்டி மற்றும் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கலாமா?

    கடன் வாங்க விரும்புவோருக்கு தனிநபர் கடன்கள் ஒரு வரப்பிரசாதம். பண நெருக்கடியில் பலரும் வங்கியில் தனிநபர் கடனை நாடி செல்கின்றனர். பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் கடன்கள் சிறந்த சாய்ஸாக கருதப்படுகிறது. செக்யூரிட்டியை விட கடன் தொகை அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் தனிநபர் கடன்களில் மட்டுமே உண்டு. எனினும், நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே தனிநபர் கடன் வாங்குவது சாத்தியம்.மற்ற சில்லறை கடன் வகைகளைப் போலவே, அரசுக்கு சொந்தமான வங்கிகளும் தனிநபர் கடன்களுக்கான மலிவான வட்டி விகிதங்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன.

    ஐந்து வருட கால அவகாசத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்காக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்களின் அடிப்படையில் EMI கணக்கிடப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வட்டி மற்றும் கட்டணங்கள் வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து மாறுபடலாம்.இப்போது பர்சனல் லோனில் வங்கிகள் வழங்கும் வட்டி மற்றும் மாத தவணைக் குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

    ரூ 5 லட்சம் ரூபாய்க்கு, 5 வருட கால அவகாசத்தில் நீங்கள் லோன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் இ.எம். ஐ விவரங்களை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 8.90% விதிக்கப்படுகிறது தவணை தொகை ரூ.10,355 கட்ட வேண்டும்.சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வட்டி விகிதம் 8.90% தவணை தொகை ரூ.10,355 ஆகும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 8.70% தவணை தொகை - ரூ.10,307 கட்ட வேண்டும்.

    யெஸ் பேங்கில் வருடத்திற்கு வட்டி விகிதம் 13.99% தவணை தொகை ரூ.11,632, இந்தியன் வங்கி வட்டி விகிதம் 9.05% தவணை தொகை ரூ.10,391 ஆகும். பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 10.00%, தவணை தொகை ரூ.10,624 கட்ட வேண்டும்.சவுத் இந்தியன் பேங்க் வட்டி விகிதம் 10.25% - தவணை தொகை ரூ.10,685. எச்டிஎஃப்சி வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 10.50% தவணை தொகை ரூ.10,747 ஆகும். ஐசிஐசிஐ வங்கி வருடத்திற்கு வட்டி விகிதம் 10.50% தவணை தொகை ரூ.10,747. கனரா வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 11.25% - தவணை தொகை ரூ.10,934.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank Loan

    அடுத்த செய்தி