ஹோம் /நியூஸ் /வணிகம் /

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு உடனே ஓகே ஆகும் பர்சனல் லோன்! என்ன காரணம் தெரியுமா?

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு உடனே ஓகே ஆகும் பர்சனல் லோன்! என்ன காரணம் தெரியுமா?

பெர்சனல் லோன்

பெர்சனல் லோன்

சம்பளம் பெறும் ஊழியர் ஒருவரின் இன்ஸ்டன்ட் பர்சனல் லோன் விண்ணப்பம் தான் ஏற்று கொள்ளப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதிகரித்த வாழ்க்கை செலவுகள் காரணமாக ஒருகட்டத்தில் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் தான் இன்ஸ்டன்ட் பர்சனல் லோன்ஸ் (IPL) எனப்படும் உடனடி தனிநபர் கடன்கள் காலத்தின் தேவையாக மாறி இருக்கின்றன.

  திருமண செலவுகள், குடும்ப விடுமுறை செலவுகள் அல்லது எதிர்பாராத மற்றும் உடனடி செலவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட செலவுகளை சமாளிக்க இன்ஸ்டன்ட் பர்சனல் லோன்களை ஒருவர் பயன்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக உடனடி தனிநபர் கடன் பெறும் செயல்முறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கான வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன.

  பொதுவாக கடன்கள் செக்யூர்ட் மற்றும் நான்-செக்யூர்ட் உள்ளிட்ட வகைகளின் கீழ் வருகின்றன. இதில் பர்சனல் லோன் நான்-செக்யூர்ட் பிரிவின் கீழ் வருகிறது. இதனால் யார் வேண்டுமானாலும் இன்ஸ்டன்ட் பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம். பர்சனல் லோன்களை பெற கடன் வாங்குபவர் எந்த செக்யூரிட்டியையும் வழங்க அவசியமில்லை என்றாலும், அவற்றைப் பெறுவது கடினமாகவும், பாதுகாக்கப்பட்ட கடன்களை விட விலை அதிகமாகவும் இருக்கும். பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிக்க ஓரிடத்தில் வேலை செய்வோர், சுயதொழில் செய்வோர் அல்லது தற்சமயம் வேலையில்லாதோர் என யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

  குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கில் சலுகைகளை வாரி வழங்கும் 2 வங்கிகள்..!

  ஆனால் இதில் சம்பளம் பெறும் ஊழியர் ஒருவரின் இன்ஸ்டன்ட் பர்சனல் லோன் விண்ணப்பம் தான் ஏற்று கொள்ளப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கான காரணம் என்னவென்பதை தற்போது பார்க்கலாம். எந்தவொரு செக்யூரிட்டியும் இல்லாமல் IPL கடன் வழங்கும் முன் வங்கிகள் கடன் வாங்குபவரின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை உறுதி செய்ய விரும்புகின்றன.

  அந்த வகையில் சுயதொழில் செய்பவர் மற்றும் கடன் விண்ணப்பிக்கும் போது வேலை இல்லாதவர் ஆகிய 2 பிரிவினரை காட்டிலும் மாத ஊதியம் பெறும் நபர் நிலையான வருமானம் கொண்டிருப்பதால் இன்ஸ்டன்ட் பர்சனல் லோனை வாங்க முன்னுரிமை பெறுகிறார். நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் சுயதொழில் செய்பவர் அல்லது வேலையில்லாத விண்ணப்பதாரரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடன் தகுதி குறைகிறது. மாத சம்பளம் பெறும் தனிநபர் கூட பர்சனல் லோனுக்கான ஒப்புதலைப் பெறுவது கீழ்வரும் சில காரணிகளைப் பொறுத்தது.

  Fixed deposit: வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்! டெபாசிட் செய்ய இதுதான் சரியான டைம்

  பணியாற்றும் நிறுவனம்:

  பர்சனல் லோனை பெறுவதற்கான காரணிகளில் ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாத சம்பளம் வாங்கும் ஒருவரின் பர்சனல் லோனை அங்கீகரிக்கும் முன் அவர் தொடர்புடைய நிறுவனத்தின் நற்பெயரையும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன.

  ஆண்டு வருமானம்:

  லோன்களை திருப்பி செலுத்துவதற்கான ஒருவரின் திறனைத் தீர்மானிக்க வெளிப்படையாக ஆண்டு வருமானம் உதவுவதால், ஒருவரது தனிநபர் கடன் தகுதியை மதிப்பிட மிக முக்கியமான காரணியாக ஆண்டு வருமானம் பார்க்கப்படுகிறது.

  நிலுவை கடன்:

  பர்சனல் லோன் கேட்டு அணுகும் ஒருவர் ஏற்கனவே வாங்கிய வேறு கடனை பாதி கூட செலுத்தாமல் கணிசமான கடன் தொகையை நிலுவையில் வைத்திருந்தால், கடன் வழங்கும் அமைப்பு கடன் கேட்பவரின் திருப்பி செலுத்தும் திறன் குறித்து யோசிக்கும்.

  அதிக கடனுக்கு விண்ணப்பம்..!

  ஒருவர் குறுகிய காலத்தில் அதிக முறை கடன் கேட்டு பல வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் விண்ணப்பித்திருந்தால், அது கடன் வழங்க போகும் நிறுவனத்திற்கு, கடன் கேட்பவரின் நிதி நிலைமை சரியில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. எனவே ஒரு தனிநபரின் நிதி வரலாறு கூட பர்சனல் லோன் விஷயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

  கிரெடிட் ஸ்கோர்:

  CIBIL மூலம் கணக்கிடப்படும் கிரெடிட் ஸ்கோர் கடன் கேட்கும் ஒருவரின் நிதி மேலாண்மை திறன்களை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன் வாங்கி இருக்கும் லோன்களை குறித்த நேரத்தில் சரியாக பொறுப்புடன் திருப்பி செலுத்தி உள்ளாரா என்பதை காட்டும் சிபில் ஸ்கோரும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank Loan, Loan, Loan applications, Personal Loan