ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்கள் 66,239 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் தனிநபர் கடன்கள் 73,011 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதை வங்கிகள் குறைத்துக்கொண்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களில் முக்கிய தொழில்களான இரும்பு மற்றும் எஃகு நிறுவனங்களுக்கான கடன்கள் 39,249 கோடி ரூபாயாகவும் உர மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கான கடன்கள் 10,146 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளன. சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி ஆகிய நிறுவனங்களின் கடன் பங்களிப்பு சிறிது அதிகரித்து காணப்பட்டுள்ளது.
எனினும் இவை கடன் துறைகளுக்கான நேர்மறை வளர்ச்சியை எட்டவில்லை. பெரிய நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 5 சதவிகிதம் குறைந்துள்ளது. இது கடன் வளர்ச்சியை 2 புள்ளி 3 சதவிகிதம் குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கு வழங்கப்படும் கடன் அதிகரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் 20,096 கோடி ரூபாய் அளவிற்கு வீட்டு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாகனக் கடன் மற்றும் தங்க நகை கடனும் 3,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற தனிநபர் கடன்கள் 45 ஆயிரம் கோடி ரூபாயாகவும் ஒட்டு மொத்தமாக தனிநபர் கடன்களின் நிலுவைத் தொகை 73,000 கோடியாகவும் அதிகரித்துள்ளன. இது தனிநபர் கடன்களை 29 புள்ளி 18 லட்சம் கோடியாக விரிவுபடுத்தியுள்ளது. இதேப்போல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான கடன்களும் 9 சதவிகிதம் குறைந்துள்ளது.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.