Home /News /business /

பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

Personal Loan: திடீர் மருத்துவ செலவு, டிராவல், பிசினஸ் தேவை, கல்விக்கட்டணம் போன்ற பல செலவுகளுக்கு, மாதச்சம்பளம் வாங்குபவர்கள் பர்சனல் லோனை தேர்வு செய்கின்றனர்.

  வங்கிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லோன் வேண்டும் என்றால் நாள் கணக்கில் வங்கி மேலாளரை சந்தித்து, கட்டுக்கட்டாக ஆவணங்களை காட்டி, லோன் பணம் கைக்கு வருவதற்காக மாதக்கணக்கில் காத்திருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது வீட்டில் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே நீங்கள் லோன் பெற விரும்பும் வங்கின் ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப்-க்கு சென்று கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். சில வங்கிகள் ஆன்லையிலேயே கடனை வழங்கவும் செய்வதால், வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை.

  என்ன தான் வங்கியின் கடன் கொடுக்கும் முறை டிஜிட்டலுக்கு மாறினாலும், கடன் பெறுவதற்கு முன்பு கடன் பெறப்போகும் வங்கி, கடன் சலுகை, வட்டி விகிதம் போன்ற விஷயங்களை நீங்கள் பழைய முறைப்படியே அலசி ஆராய்வது மிகவும் நல்லது. அதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  அதிக தொகை கிடைக்கூடிய பர்சனல் லோன்:

  வீடு மறுகட்டமைப்பு, நிலம் வாங்குதல், திடீர் மருத்துவ செலவு, டிராவல், பிசினஸ் தேவை, கல்விக்கட்டணம் போன்ற பல செலவுகளுக்கு, மாதச்சம்பளம் வாங்குபவர்கள் பர்சனல் லோனை தேர்வு செய்கின்றனர்.

  நீங்கள் வாங்கும் கடன் தொகை உங்களுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதிகபட்ச அனுமதியுடன் 25 லட்சம் ரூபாய் வரை வழங்க கூடிய பர்சனல் லோன்கள் இருக்கின்றன.

  இதையும் படிங்க.. State Bank வழங்கும் அட்டகாசமான பிக்சட் டெபாசிட் திட்டம்… மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் தான்!

  தளர்வுகள், சலுகையுடன் கூடிய பர்சனல் லோன்:

  பர்சனல் லோன் வாங்க முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால் ஓவர் கன்டிஷன் இல்லாத, சலுகைகள் வழங்க கூடிய வங்கியை தேர்ந்தெடுங்கள். குறிப்பாக வயது, ஆண்டு வருமானம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் குறைவான அளவுகோள்களை மட்டுமே கொண்ட, அதிக ஆவணங்களை கேட்டு அலையவிடாத வங்கியை தேர்ந்தெடுப்பது நல்லது.

  இதேபோல் உங்கள் கிரெடிட் ஸ்டேட்மெண்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோரும் உங்கள் சுயவிவரத்தின் முக்கியமான பகுதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக, நீங்கள் குறைந்தபட்சம் 650 பாயிண்ட்ஸ் சிபி ஸ்கோர் வைத்திருக்க வேண்டும். மேலும் முன்னதாக பெறப்பட்ட கடன் தொகைக்கான நிலுவைத் தொகையை சரியான தேதியில் திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.

  இதையும் படிங்க.. 45 வயதில் Home Loan பெற முயற்சி செய்கிறீர்களா? இதைச் செய்தால் சக்சஸ் ஆகும்

  திரும்ப செலுத்து கால அளவு:

  பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பாக கட்டாயம் இதைப்பற்றி நீங்கள் திட்டமிட வேண்டும். வாங்கும் தொகையை எளிமையாக திரும்ப செலுத்த உரிய கால அவகாசம் உள்ள வங்கியில் மட்டுமே கடன் பெற வேண்டும். ஏனென்றால் கடனை வாங்குவது எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு அதனை திரும்ப செலுத்துவதிலும் கவனமாக செயல்பட வேண்டும். உங்களுடையை நிதி நிலைக்கு ஏற்றார் போல், தவணைக்காலத்தையும், தொகையையும் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் இருக்க வேண்டும்.

  கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

  தனிநபர் கடன் வாங்கும் போது அதற்கான நிர்வாக கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். இதில் செயலாக்கக் கட்டணங்கள், கையாளுதல், அறிக்கைக் கட்டணங்கள் மற்றும் பிற அடங்கும். நீங்கள் கடன் வாங்குவதற்கு முன் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தச் சரிபார்ப்பைச் செய்யத் தவறினால், மறைக்கப்பட்ட செலவுகள் ஏற்படலாம், இதனால் அதிக தொகை செலவிடவும் நேரலாம்.

  ப்ரீ அப்ரூவல் லோன் சலுகைகள்:

  முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் என்பது உங்கள் சுயவிவரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட டீல்கள் ஆகும். கடன் வழங்குபவரைப் பொறுத்து, கொடுக்கப்பட்ட அனுமதிக்கு நீங்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இது உங்களுக்கான சிறந்த தனிநபர் கடன் சலுகையாக இருக்கலாம். இந்த டீல்கள் பொதுவாக எளிதாகப் பெற முடியும்.

  பர்சனல் லோன் வாங்கும் முன்னதாக சில புத்திசாலித்தனமான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு நாங்கள் மேலே கொடுத்துள்ள சில விஷயங்களுக்கு உங்களுக்கு உதவியானதாக இருக்கும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bank accounts, Bank Loan, Personal Loan

  அடுத்த செய்தி