வீடு கட்டுவது தொடங்கி கார், பைக் வாங்க என அனைத்திற்கும் கடன் வாங்குவது என்பது தற்போது அதிகரித்துவிட்டது. கடன் வாங்கும் போது உங்களுக்கு பின்னர் யார் கடனை செலுத்துவார்கள்? என வாரிசுதாரர்களின் விபரங்கள் அனைத்தையும் வங்கி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளும். இருந்தப்போதும் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், கடனை திரும்ப செலுத்த யார் பொறுப்பு? என்ற குழப்பம் இன்றும் பலருக்கு ஏற்படும். எனவே இந்நேரத்தில் கடன் வாங்கியவர் இறந்து விட்டால் வாங்கிய கடனை யார் கட்ட வேண்டும்? என இங்கே அறிந்து கொள்வோம்.
அவசர தேவைக்கு கடன் கூட பெறலாம்.. மிகச் சிறந்த பென்சன் சேமிப்பு திட்டம் இதோ!
வங்கிகள் கொடுக்கும் கடன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானது அல்ல. பாதுகாப்பான கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன் என இருவகையாக உள்ளது. வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவை பாதுகாப்பான கடன் பட்டியலிலும், கிரெடிட் கார்டு , தனி நபர் கடன் போன்றவை பாதுகாப்பற்ற கடன் பட்டியலிலும் இடம் பெறும்.
வீட்டு கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், இணை விண்ணப்பதாரர் தான் அந்த கடனுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். முன்னதாக வங்கி நிர்வாகம் வாரிசுதாரரருக்கு சட்டப்படி வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி வைக்கும். கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும் வங்கியில் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால், சிவில் நீதிமன்றம், கடன் மீட்பு தீர்ப்பாயம் அல்லது SARFAESI சட்டத்தின் கீழ் வீட்டை மீட்கும் உரிமை வங்கிக்கு உண்டு. சொத்துகள் ஏலம் விடுவதன் மூலம் வங்கிக்கடனை மீட்க நடவடிக்கை எடுக்கும்.
போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயங்கள்!
ஒரு வேளை வீட்டு கடன் வாங்கியவர் டேர்ம் இன்சுரன்ஸ் மட்டும் எடுத்துள்ளார் என்றால், உரிமை கோரல் தொகையை நாமினியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, உரிய சட்ட நடைமுறைக்குப்பிறகு சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இறந்தவரின் வீட்டுக் கடன் மற்றும் பிற பொறுப்புகளைத் திருப்பிச் செலுத்த, கால காப்பீட்டுக் கோரிக்கை தொகையைப் பயன்படுத்த சட்டப்பூர்வ வாரிசுக்கு உரிமை உண்டு. ஆனால் வீட்டுக் கடன் காப்பீடு இல்லாவிட்டால், இணைக் கடன் வாங்குபவர், சட்டப்பூர்வ வாரிசு அல்லது உத்தரவாததாரரிடம் இருந்து நிலுவைத் தொகையை வங்கி திரும்பப் பெற முடியாது எனவும் சொத்தைக் கைப்பற்றி பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் மேற்கொள்ளும்.
வாகன கடன் செலுத்துதல்:
வாகன கடனை எடுக்கும் ஒருவர் இறந்துவிட்டால், இந்த கடனை திரும்ப செலுத்தும் பொறுப்பு குடும்பத்தினருக்கு உள்ளது. காரை வைத்திருக்க விரும்பும் குடும்பத்தினர் விரும்பும் பட்சத்தில், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு நிலுவை தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒருவேளைசட்டப்பூர்வ வாரிசு நிலுவையில் உள்ள கடன் தொகையை திருப்பி செலுத்த மறுத்தால், வங்கி காரை பறிமுதல் செய்து அதன் நிலுவைத் தொகையை ஏலம் விடுவதன் மூலம் பெற்றுக்கொள்கிறது.
பாதுகாப்பில்லாத தனி நபர் கடன், கிரெடிட் கார்டு பில்களை வங்கிகள் ரைட் ஆப் லிஸ்டில் சேர்க்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.