Home /News /business /

ஈஸியா கிடைத்தாலும் பர்சனல் லோனுக்கு எங்கு YES/NO சொல்ல வேண்டும் தெரியுமா?

ஈஸியா கிடைத்தாலும் பர்சனல் லோனுக்கு எங்கு YES/NO சொல்ல வேண்டும் தெரியுமா?

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

சிலர் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை பெறுகின்றனர். இவை பாதுகாப்பற்ற கடன் வகையைச் சேர்ந்தவை ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வரவு எட்டணா, செலவு பத்தணா என்று இல்லாமல் நாம் என்ன சம்பாதிக்கிறோமோ, அதை வைத்து வாழக் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால், காலத்தின் கொடுமை என்ன என்றால், பெரும்பாலான நபர்களுக்கு ஏதேனும் கூடுதல் செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது.

    வீடு, நிலம், கார் போன்ற அசையும், அசையா சொத்துகளை வாங்குவதற்காக சிலர் கடன் பெறுகின்றனர். இந்தக் கடனை, மாதாந்திர வருவாயை கொண்டு ஈஎம்ஐ என்ற தவணை முறையில் திருப்பிச் செலுத்துகின்றனர்.

    SBI : வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ வங்கி சேவைகளை பெறலாம்.. எப்படி தெரியுமா?

    அசையும், அசையா சொத்துகளின் பெயரில் வாங்கப்படுவது பாதுகாக்கப்பட்ட கடன் என்றும், பிற வகை கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படும் சிலர் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை பெறுகின்றனர். இவை பாதுகாப்பற்ற கடன் வகையைச் சேர்ந்தவை ஆகும்.

    தனிநபர் கடனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

    ரசீதுகள் மற்றும் தினசரி செலவுகள்

    நாம் வாங்கிய சம்பளம் ஒரு மாதத்திற்கு நடுவே தீர்ந்து விட்டது என்றால், அடுத்த வரக் கூடிய பில்களுக்கு பணம் செலுத்த முடியாமல் இருக்கும். அந்த சமயத்தில் தனிநபர் கடன் பெறலாம். மாதாந்திர பட்ஜெட் செலவுகளுக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கை நிறைய லாபம் தரும் FD, RD, PPF திட்டங்கள் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!

    அவசர தேவைகள்

    மருத்துவச் செலவுகள் எப்போது வரும், எவ்வளவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே, அவற்றை சமாளிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிறு கடன்களை அடைக்க

    சில நபர்கள் சிறு, குறு நிதி நிறுவனங்களிடம் கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பார்கள். தனிநபர் கடன் பெற்று அந்தக் கடனை அடைத்தால் வட்டியின் சுமை குறையும்.

    விழா மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள்

    இந்திய பண்பாடு என்பது விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நிறைந்தவை. அவையின்றி மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடையாது. தவிர்க்க முடியாத இந்த நிகழ்வுகளுக்காக தனிநபர் கடன் பெறலாம்.

    கல்விக் கட்டணம்

    இன்றைய சூழலில் கல்விக்கு அதிக தொகை செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை சமாளிக்க தனிநபர் கடன் பெறலாம்.

    தனிநபர் கடனை எதற்கெல்லாம் பயன்படுத்தக் கூடாது?

    சூதாட்டம்

    சூதாட்டம் விளையாடுவதே சட்டப்படி தவறு. ஆனால், இன்று ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி விட்டன. அவற்றை பயன்படுத்தினால் சொந்த பணத்தை இழப்பதோடு, இதுபோல கடன் வாங்கியும் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். இறுதியில் நிதிச்சுமை நம்மை பாடாய் படுத்திவிடும்.

    சேமிப்பு அல்ல

    சேமிக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல பழக்கம் தான். ஆனால், அதை நம் வருமானத்தில் இருந்து எடுத்து வைக்க வேண்டும். அதே சமயம், கடன் பெற்று அதில் சிறு பணத்தை சேமிப்பு ரீதியில் வைத்துக் கொள்வது பலன் தராது.

    பங்குச் சந்தை முதலீடு

    பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக தனிநபர் கடன் பெறுவது நல்லதல்ல. ஏனென்றால் நிலையற்றத் தன்மை மற்றும் ஏற்ற, இறக்கங்களை கொண்டது பங்குச் சந்தை ஆகும். பணத்தை இழந்தால் கடனை அடைக்க திண்டாட்டம் ஆகிவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank Loan, Personal Loan

    அடுத்த செய்தி