தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்க பரிசீலனை: நிர்மலா சீதாராமன்

தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்க பரிசீலனை: நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • Share this:
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலே இறுதி முடிவெடுக்கும் எனக் கூறிய அவர், மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதற்காக தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

தனிநபர் வருமான வரி விகிதம் எப்போது குறைக்கப்படும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அடுத்தாண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


இதன்மூலம் தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்பது தெளிவாகியுள்ளது.
First published: December 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்