ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

news18
Updated: July 23, 2019, 10:24 PM IST
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
வருமான வரி
news18
Updated: July 23, 2019, 10:24 PM IST
2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியை 2019 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனங்கள் என அனைவரும் தங்களது சென்ற நிதியாண்டின் வருமானத்தை அரசுக்குக் கணக்கு காண்பித்து வரியைச் செலுத்த வேண்டும். அதைச் சரியான காலக்கெடுவிற்குள் செலுத்தத் தவறினால் அபராதம், கூடுதல் வட்டி செலுத்த வேண்டி வரும். சில நேரங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்பும் உண்டு.

எனவே சரியான காலக்கெடுவிற்குள் வருமான வரி தாக்கல் எனில் என்ன ஆகும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.


அபராதம்:


ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரியைச் செலுத்த வெண்டும். சில நேரங்களில் அரசு காலக்கெடுவை நீட்டிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்படி இந்த முறை ஆகஸ்ட்31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். எனினும் வருமான வரி தக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய வரிக்கு கூடுதல் வட்டி:Loading...

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், செலுத்த வேண்டிய வரிக்குக் கூடுதலாக 1 சதவீதம் வரை வட்டியைச் செலுத்த வேண்டும்.

நீதிமன்றம்:


வருமான வரித் தாக்கல் செய்யாமல், வருமான வரி சட்டப் பிரிவு 142, 148 பிரிவுகளில் வருமான வரி துறையிடமிருந்து நோட்டிஸ் அனுப்பியும் சரியான பதில் இல்லாத போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவும் வாய்ப்புகள் உண்டு.

செலுத்த வேண்டிய வரியைப் பொறுத்து 16 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

ரீஃபண்டு பெறுவதில் தாமதம்:


உங்கள் பான் எண் கீழ் கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது அதைத் திரும்பப் பெறும் நேரமும் கால தாமதமாக வாய்ப்புகள் உள்ளது.
First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...