அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

பிரதான் மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் என்பதைத் தான் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் (Pradhan Mantri Shram-Yogi Maandhan) என்று அறிவித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: February 2, 2019, 2:49 PM IST
அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
பிரதான் மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம்
Web Desk | news18
Updated: February 2, 2019, 2:49 PM IST
பட்ஜெட் 2019-ல் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்குப் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் (Pradhan Mantri Shram-Yogi Maandhan) திட்டம் கீழ் மாதம் 3,000 பென்ஷன் அளிக்கப்படும் என்று பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

யாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்? யாரெல்லாம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பட்டியல் கீழ் வருவார்கள்?


 • விவசாயத் தொழிலாளர்

 • மீனவர்

 • கட்டுமானத் தொழிலாளர்

 • ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர்

 • பனைமரத் தொழிலாளர்

 • காலணித் தொழிலாளர்

 • முடி திருத்துவோர்

 • தையல் தொழிலாளர்

 • ஓவியர்

 • கைத்தறி நெசவு தொழிலாளர்கள்

 • தூய்மைப் பணிபுரிவோர்

 • உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள்

 • கிராமக் கோவில் பூசாரிகள்

 • நாட்டுப்புறக் கலைஞர்கள்

 • கட்டட தொழிலாளர்கள்

 • புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர்

 • அச்சக தொழிலாளர்

 • கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்

 • சிறு வியாபாரிகள்

 • வீட்டுப் பணியாளர்

 • பொற்கொல்லர்

 • திரைத் தொழிலாளர்


தகுதி


நாடு முழுவதும் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் மாதம் ரூ. 15,000-க்கும் குறைவாகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டம் கீழ் ஓய்வூதியம் பெற முடியும்.

தொழிலாளர்கள் பங்களிப்பு


பிரதான் மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். அரசின் பங்களிப்பு 100 ரூபாய் .

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொழிலாளர்கள் 60 வயது நிறைவடையும் போது மாதம் 3,000 ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும்.

இந்தத் திட்டம்,  பிரதான் மந்திரியின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படும்.

மேலும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது 30 லட்சம் ரூபாய் வரையிலான கிராஜூவிட்டி தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 20 லட்சம் ரூபாய் வரையிலான கிராஜூவிட்டிக்கு மட்டும் வரி விலக்கு இருந்தது.

மேலும் பார்க்க: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...