பிஏசிஎல், பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் கவனத்திற்கு!

அதிக வட்டிக்கு ஆசை பட்டு இந்தத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமார்ந்த பலருக்கு ஓய்வுபெற்ற நீதிபதியான ஆர் எம் லோதா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

பிஏசிஎல், பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் கவனத்திற்கு!
பிஏசிஎல்
  • News18
  • Last Updated: February 13, 2019, 3:59 PM IST
  • Share this:
பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தின் கீழ் 5.8 கோடி மக்களிடம் 49,000 கோடி ரூபாயை ஏமாற்றியதாகப் பிஏசிஎல் நிறுவனத்தின் மீது இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தடை விதித்திருந்தது.

அதிக வட்டிக்கு ஆசை பட்டு இந்தத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமார்ந்த பலருக்கு ஓய்வுபெற்ற நீதிபதியான ஆர் எம் லோதா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து பணத்தைப் பெற்றுத் திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே குறைந்தபட்சமாக 2,500 ரூபாய் வரை முதலீடு செய்தவர்களின் பணத்தை இந்தக் குழு திருப்பி அளித்துள்ளது. தற்போது பிற முதலீட்டாளர்களின் பணத்தைத் திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கையில் நீதிபதி லோதா தலைமையிலான குழு இறங்கியுள்ளது.


எனவே பிஏசிஎல் பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் தங்களது விவரங்களை http://sebipaclrefund.co.in/ என்ற இணையதளத்தில் 2019 ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பிஏசிஎல் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? (வீடியோ)


எஸ்எம்எஸ் மூலமாக முதலீட்டு விவரங்களை அளிப்பது எப்படி?


பிஏசிஎல் முதலீட்டுப் பத்திரத்தில் உள்ள படி பெயர், பதிவு செய்த எண் மற்றும் எவ்வளவு தொகை திரும்பப் பெற வேண்டும் போன்ற விவரங்களை டைப் செய்து 562632 எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

எஸ்எம்எஸ் உதாரணம்: Ramesh, U116407744, 1500

பின்னர் உங்களுக்கு ஒரு இணைப்பு அளிக்கப்படும். அந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் ஆதார் / பான் எண் மற்றும் பிஏசிஎல் பத்திரம் போன்றவற்றை ஸ்கான் செய்து பதிவேற்ற வேண்டும். இவற்றைச் செய்த பிறகு உங்கள் வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட், வங்கி கணக்கு வைத்துள்ளவரின் பெயர், போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இவற்றைச் செய்த பிறகு உங்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வெற்றிகரமாகப் பெறப்பட்டதற்கான தகவல் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு அளிக்கப்படும்.

விண்ணப்ப நிலையைக் கண்டறிவது எப்படி?

விண்ணப்பித்த பிறகு 044-395-771985 என்ற எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணை # உடன் டைப் செய்து டையல் செய்வதன் மூலை விண்ணப்பத்தின் நிலையைக் கண்டறிய முடியும்.

மேலும் உங்கள் பணம் திரும்ப அளிக்கப்படுமா என்ற அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதா, எதனால் நிராகரிக்கப்பட்டது போன்ற விவரங்களும் எஸ்எம்எஸ் வழியாக முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

குறிப்பு: இந்தத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக எவ்வளவு நபர்கள் விண்ணப்பிக்கிறார்கள் மற்றும் பணம் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டு ப்ரோ ரேட்டா அடிப்படையில் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் பார்க்க:  ₹2000 ஆயிரம் நிதி.... பயனாளிகள் தேர்வு எப்படி?
First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்