சென்னை பிஎஃப் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்!

2019 ஜூன் மாதத்திற்கான “நிதி ஆப்கே நிகத்”, வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது.

சென்னை பிஎஃப் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: May 29, 2019, 1:26 PM IST
  • Share this:
சென்னை வருங்கால வைப்பு நிதி ஆணையம் அலுவலகத்தில் பிஎஃப் சந்தாதார்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சென்னை மண்டல அலுவலகம் சார்பில், மாதம் தோறும் 10-ம் தேதியன்று, சந்தாதாரர்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவோரின் நீண்டகால கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான சிறப்பு முகாம் “நிதி ஆப்கே நிகத்” என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி 2019 ஜூன் மாதத்திற்கான “நிதி ஆப்கே நிகத்”, வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி திங்கட்கிழமையன்று, ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.


இந்த முகாமில் சந்தாதாரர்கள், உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் காலை மணி 10.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை தங்களுக்கு பிஎஃப் கணக்கில் உள்ள குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். வேலை வழங்குநர்கள் பிற்பகல் 3.00 முதல் 4 மணி வரை தங்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்டு அறியலாம்.

சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண விரும்புபவர்கள் அவர்களது பெயர்களை வைப்பு நிதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அலுவலரிடம் அவர்களது பிஎஃப் கணக்கு எண், கோரிக்கையின் தன்மை போன்ற விவரங்களுடன் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு வைப்பு நிதி அலுவலகத்தின் மண்டல ஆணையர் திரு சலீல் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பார்க்க:
First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading