மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்தே ஆக வேண்டும்... வருமான வரித்துறை எச்சரிக்கை...!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற முடியாத சூழல் உருவாகும்.

news18
Updated: March 23, 2019, 5:58 PM IST
மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்தே ஆக வேண்டும்... வருமான வரித்துறை எச்சரிக்கை...!
பான் கார்டு, ஆதார் எண் இனைப்பு
news18
Updated: March 23, 2019, 5:58 PM IST
வரி செலுத்துனர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பான் கார்டு, ஆதார் எண் இணைப்பைச் செய்ய வேண்டும் என வருமான வரித் துறை கூறியுள்ளது.

வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் எப்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி?


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உங்கள் மொபைல் ஃபோனில் 'UIDPAN' <space> <12-digit Aadhaar> <space> <10-digit PAN> என தட்டச்சு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் உதாரணம்: UIDPAN 111122223333 ABCD1234E

பான் கார்டுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?


பான் காடுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். இதற்கு incometaxindia.gov.in என்ற இணைப்பிற்குச் சென்று பின் வருமாறும் செய்ய வேண்டும்.

வருமான வரித் துறையின் incometaxindia.gov.in இணையதளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பின்னர் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து ‘Link Aadhaar' என்ற தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் அங்கு கேட்கப்படும் விவரங்களை அளித்து captcha என அழைக்கப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு ‘sumbit’ என்ற பொத்தானை கிளிக் செய்டும் போது இணைப்பு முழுமை அடையும்.

மேலே கூறிய படிகளைச் செய்யும் போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை எனில் அவற்றில் உள்ள பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?


1. அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா உள்ளிட்ட மாநிலத்தவர்கள்.
2. என்ஆர்ஐ
3. 80 வயதுக்கும் மேற்பட்ட முத்த குடிமக்கள்
4. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றா என்ன ஆகும்?


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற முடியாத சூழல் உருவாகும். கடுமையான உழைப்பில் சம்பாதித்த பணத்திற்கு வரி விலக்கு பெற முடியும் என்றாலும் அவற்றை இழக்க நேரிடும்.

மேலும் பார்க்க:
First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...