தங்க நகைகள், முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர் சரியான இடமா?

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளிலிருந்து கொள்ளை, திருட்டு போன்ற காரணங்களால் 235 கோடி ரூபாய் காணமல் போனது என்று தரவுகள் கூறுகின்றன.

news18
Updated: April 21, 2019, 7:44 PM IST
தங்க நகைகள், முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர் சரியான இடமா?
வங்கி லாக்கர்
news18
Updated: April 21, 2019, 7:44 PM IST
இந்தியாவில் தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை வாங்குவது என்பது ஆடம்பரத்தையும் தாண்டி ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு முதலீடாக ஆடம்பர பொருட்களை வாங்கும் பலர், அவற்றை வீட்டில் வைத்துக்கொள்ள பயப்பட்டு வங்கி லாக்கரில் பத்திரமாக வைத்துக் கொள்வது வழக்கம்.

இப்படி வங்கி லாக்கரில் உள்ள தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பானதா என்று கேட்டால், இல்லை என்றே கூற முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளிலிருந்து கொள்ளை, திருட்டு போன்ற காரணங்களால் 235 கோடி ரூபாய் காணமல் போனது என்று தரவுகள் கூறுகின்றன.

வங்கில் லாக்கர்


வங்கிகளில் உள்ள பணம் காணாமல் போனால் அதற்கு அவர்கள் தானே பொறுப்பு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வங்கிகள் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு பொறுப்பேற்காது.

தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்தாலும் திருடு போய்விடும் என்று பயம், வங்கிகளில் வைத்திருந்தாலும் அதன் பாதுகாப்பிற்கு அவர்கள் பொறுப்பில்லை. அப்படியென்றால் என்னதான் செய்வது?

வங்கி லாக்கரில் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வைப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றின் பாதுகாப்பிற்கு என்பதை விட அவை தொலைந்துபோனால் அவற்றுக்கு காப்பீடு அளிக்க கூடிய இன்சூரன்ஸ் பாலிசிகள் நிறைய சந்தையில் உள்ளன என்பதை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. ஆம், இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் வங்கி லாக்கரில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்கள் தொலைந்து போனாலும் அவற்றின் மதிப்பிற்கு இணையான பணத்தை திரும்பப் பெற முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வங்கி லாக்கருக்கு இன்சூரன்ஸ் பாலிசி வாங்கினாலும் அவற்றில் வைக்கப்படும் சில பொருட்களுக்கு காப்பீடு வழங்கப்படுவதில்லை.

எனவே வங்கி லாக்கரில் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வைக்கும் முன்பு அவற்றுக்கு காப்பீடு வாங்குவது குறித்து சிறந்த இன்சூரன்ஸ் விற்பனையாளரிடமிருந்து ஆலோசனை பெறுவது நன்று..!

மேலும் பார்க்க:
First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...