இனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது!

இனி உங்களால் இந்த வழியில் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியாது!
  • News18
  • Last Updated: July 19, 2019, 10:31 PM IST
  • Share this:
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கான ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் பிஎஃப் என கூறலாம். இந்த திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 12 சதவீத பங்களிப்பும், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதமும் செலுத்தப்படும். ஊழியர்களின் பங்களிப்பை இடையில் எடுக்க முடியும் என்றாலும், நிறுவனத்தின் பங்களிப்பை ஓய்வு பெறும்போது தான் திரும்பப் பெற முடியும்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு அதிலிருந்து வெளியேறி 2 மாதம் வரை சம்பளம் பெறாமல் இருந்தால் பணத்தை இடையில் திரும்பப் பெற முடியும். மேலும் திருமணம், குழந்தைகளின் கல்வி, வீடு அல்லது நிலம் வாங்குதல், வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவது, வீட்டைப் புதுப்பித்தல் போன்ற காரணங்களுக்காகவும் இடையில் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

மேலே கூறியது ஏற்கனவே பலருக்கும் தெரியும். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பிஎஃப் கணக்கின் யூஏஎன் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால், நேரடியாக பணத்தை திரும்பப் பெற முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


யூஏஎன் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள பல ஊழியர்கள், நிறுவனங்கள் மூலமாக பிஎஃப் பணத்தைப் பெறக் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே நிறுவனங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள பிஎஃப் கணக்கின் பணத்தைத் திரும்பப் பெற நேரடியாக  விண்ணப்பிக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும்  செய்தி வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக என இரண்டு முறையிலும் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்தாலும் ஆன்லைன் கோரிக்கை மட்டுமே ஏற்கப்படும் என்று வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைனில் விண்ணப்பித்துத் திரும்பப் பெறுவது எப்படி?

1: ஆன்லைனைல் பிஎஃப் பணத்தை திரும்பப் பெற ஈபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ மூலம் விண்ணப்பிக்கலாம்.
2: உள்நுழைய யூஏஎன் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும்.
3: பின்னர் கேப்ட்சா குறியீட்டை குறிப்பிட்டு லாக்-இன் செய்யவும்.
 4: அடுத்து 'Manage' டேப் சென்று 'KYC'-ஐ கிளிக் செய்து, ஆதார், பான் எண், வங்கி கணக்கு போன்ற விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். இவை ஏற்கனவே நிறுவனம் சார்பாகப் பதிவேற்றப்பட்டுச் சரிபார்க்கப்பட்டு இருந்தால் எளிதாக பணத்தைத் திரும்பப் பெறலாம்.
4: KYC விவரங்கள் சரியாக இருக்கும் போது, பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு 'Online Services' சென்று 'Claim [Form-31,19&10C]' என்ற தெரிவை கிளிக் செய்ய வெண்டும்.
5: அடுத்து வரும் பக்கத்தைப் பூர்த்தி செய்து, எந்த காரணத்திற்காகப் பணத்தைத் திரும்பப் பெறுகிறோம் என்பதைத் தேர்வு செய்து, ஆதார் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுக் கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

மேலும் பார்க்க:
First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading