ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

Web Desk | news18
Updated: July 10, 2019, 2:15 PM IST
ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
வருமான வரி தக்கல்
Web Desk | news18
Updated: July 10, 2019, 2:15 PM IST
2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியை 2019 ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்று இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான விவரங்கள்?


வருமான வரி தாக்கல் செய்யும் முன்பு பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், படிவம் 16, முதலீட்டு விவரங்கள் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.


ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?


படி 1: www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணைப்பிற்கு சென்று பயனர் ஐடி(பான் எண்), கடவுச்சொல், பிறந்த தேதி, கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட விவரங்களை அளித்து உள்நுழைய வேண்டும். முதல் முறை வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கடவுச்சொல்லை பெற பதிவு செய்ய வேண்டும்.

படி 2: வருமான வரி தாகல் செய்வதற்கான இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு, மெனுவில் e-File என்பதற்கு சென்று Prepare and Submit ITR Online என்பதை கிளிக் செய்யவும்.

Loading...

படி 3: ITR 1/ITR 4S-ல் எந்த படிவம் என்பதையும், எந்த மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வெண்டும் என்பதையும் தேர்வு செய்யவும். 2018-2019 நிதியாண்டுக்கு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டை தேர்வு செய்ய வேண்டும்.

படி 4: உங்களுக்கான படிவத்தை தேர்வு செய்த பிறகு, ஆதார் எண், சம்பள விவரங்கள், பிரிவு 80சி கீழ் வரி விலக்கு பெற கூடிய விவரங்களை அளித்த பிறகு சேமிக்க வேண்டும்.

படி 5: அடுத்ததாக நீங்கள் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு, உங்களுக்கு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு போன்றவற்றை சரிபாத்துக்கொண்டு, வங்கி கணக்கு போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

படி 6: மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அளித்த பிறகு, அந்த விவரங்கள் எல்லாம் சரியானவை என்று உறுதி செய்த பிறகு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

படி 7: படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஆன்லைன் மூலம் சரிபார்ப்பை செய்ய டேஷ்போர்டுக்கு சென்று View Returns/Forms எபதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 8: அடுத்த பக்கட்தில் வருமான வரி தாக்கல் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

படி 9: பின்னர் மின்னணு சரிபார்ப்புக்கான தெரிவை கிளிக் செய்து, ஆதார் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

மேலே கூறிய படிகளை முறையாக செய்தல், வருமான வரி தாக்கல் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்படும். மின்னணு சரிபார்ப்பு செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு தபால் மூலம் பெங்களூருவில் உள்ள மத்திய நேரடி வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

மேலும் பார்க்க:
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...