18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி?

Web Desk | news18
Updated: May 17, 2019, 3:01 PM IST
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி?
பான் கார்டு
Web Desk | news18
Updated: May 17, 2019, 3:01 PM IST
உங்கள் பிள்ளைகளின் வயது 18 ஆகவில்லை என்றாலும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மைனர் பிள்ளைகளுக்கு பான் கார்டு பெற பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு வருமான வரித் துறை அனுமதி வழங்குகிறது.

பான் கார்டு இருந்தால் பிள்ளைகளின் பெயரில் முதலீடுகளைச் செய்வது எளிதாக இருக்கும். சில நிதி நிறுவனங்கள் பான் கார்டு இல்லையென்றால் முதலீடுகளைச் செய்ய அனுமதிப்பதில்லை.

எனவே 18 வயது நிரம்பாத பிள்ளைகளின் பெயரில் பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

NSDL இணையதளத்தில் உள்ள பான் கார்டு விண்ணப்பத்திற்குச் சென்று தனிநபருக்கான பான் கார்டு என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் பிள்ளையின் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், ஆதார் விவரங்கள் போன்றவற்றை அளிக்க வேண்டும். அடுத்து எந்த வருமான வரி அலுவலகம் கீழ் வருவார்கள் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் பெற்றோர் அடையாளம் சான்றுகள், முகவரி சான்றுகள், கையெழுத்து, புகைப்படம் போன்ற விவரங்களையும் பதிவேற்றிய பிறகு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதன் பான் கார்டு விண்ணப்பம் நிறைவடையும்.

பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது 15 இலக்க ஒப்புகை எண் வழங்கப்படும். அதை குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து பான் கார்டின் நிலையை ஆன்லைன் மூலம் கண்டறியலாம்.

தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NSDL இணையதளத்தில் கிடைக்கும் Form 49A-ஐ பதிவிறக்கும் செய்து அதை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம். இப்படிச் செய்யும் போதும் பெற்றோர் மற்றும் மைனர் பிள்ளையின் கையெழுத்தும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: May 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...