ரூபாய் நோட்டுகளைச் சரிபார்க்க புதிய செயலி!

2018-2019 நிதி ஆண்டில் மட்டும் 5,22,783 நோட்டுக்கள் கள்ளப்பணம் என்று பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளைச் சரிபார்க்க புதிய செயலி!
புதிய ரூபாய் நோட்க்கள்
  • News18
  • Last Updated: February 19, 2019, 10:02 PM IST
  • Share this:
இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு புதியதாக ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2000 மதிப்பிலான நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் போது பல பாதுகாப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்வதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளிலும் தொடர்ந்து கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதை நாம் செய்திகள் மூலம் பார்த்துக்கொண்டு வருகிறோம்.

2018-2019 நிதி ஆண்டில் மட்டும் 5,22,783 நோட்டுக்கள் கள்ளப்பணம் என்று பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தக் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வங்கி ஏடிஎம், கடைகளில் தான் அதிகளில் புழக்கத்தில் உள்ளன. இப்படி இருக்கும் போது கள்ள ரூபாய் நோட்டுக்களை எப்படிக் கண்டுப்பிடிப்பது என்று தெரியாமல் பலர் உள்ளனர்.

எனவே இந்தக் கள்ள ரூபாய் நோட்டுக்களை எளிதாகக் கண்டறிய Chkfake என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்தச் செயலியை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்த பிறகு பதிவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் சரிபார்க்க வேண்டிய ரூபாய் நோட்டின் மதிப்பை தேர்வு செய்து எளிமையாகச் சரிபார்க்கலாம்.கள்ள ரூபாய் நோட்டுக்களைச் சரிபார்ப்பது எப்படி? (வீடியோ)
First published: February 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading