ஆண்டுக்கு ₹10 லட்சம் வருமானம் இருந்தாலும் முழு வரி விலக்கு பெறலாம்; எப்படி?

அடுத்த நிதி ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

Web Desk | news18
Updated: February 2, 2019, 10:59 AM IST
ஆண்டுக்கு ₹10 லட்சம் வருமானம் இருந்தாலும் முழு வரி விலக்கு பெறலாம்; எப்படி?
வரி விலக்கு பெறுவது எப்படி?
Web Desk | news18
Updated: February 2, 2019, 10:59 AM IST
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களைக் கவரும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு இந்த வரி தள்ளுபடி 2,50,000 ரூபாயாக இருந்தது. மத்திய அரசு மேலும், 2,50,000 ரூபாய் உயர்த்தியுள்ளது. எனவே அடுத்த நிதி ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

மேலும் பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவ செலவுகள், பயண படி போன்ற செலவுகளுக்கான வரி கழிவை (standard deduction) 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார்.

எனவே ஆண்டு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள போது வரி சேமிப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

ஆண்டு சம்பளம்: ரூ. 10,00,000
பிரிவு 80சி கீழ் வரி விலக்கு: ரூ. 1,50,000
ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்: ரூ. 50,000
வீட்டு கடன் வட்டி தள்ளுபடி: ரூ. 2,00,000
தேசிய ஓய்வூதியத் திட்டம்(NPS): ரூ. 50,000
--------------------------------------

வரி வருவாய்: ரூ. 5,00,000
செலுத்த வேண்டிய வரி: ரூ. 12,500
வரி தள்ளுபடி: ரூ. 12,500
---------------------------------------
செலுத்த வேண்டிய வரி: 0

மேலே கூறியுள்ள உதாரணத்தின் படி பிரிவு 80சி கீழ் வரி விலக்கு பெற காப்பீடு, பிஎஃப் போன்ற பிற வரி விலக்கு சேமிப்பு திட்டங்கள்  முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு எல்லாம் செய்வதன் மூலம் 10 லட்சம் ஆண்டு வருமானம் என்றாலும் 1 ரூபாய் கூட வரி செலுத்தாமல் தவிர்க்கலாம்.

மேலும் பார்க்க: பட்ஜெட் 2019... விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய்
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...