இப்படியும் வருமான வரியை சேமிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

நடப்பு நிதி ஆண்டின் இறுதி காலாண்டு இது என்பதால் இப்போது வரி சேமிப்புக்கு தேவையான முதலீடுகளைச் செய்ய இதுவே சரியான நேரம்.

news18
Updated: January 13, 2019, 9:41 AM IST
இப்படியும் வருமான வரியை சேமிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
மாதிரிப் படம்
news18
Updated: January 13, 2019, 9:41 AM IST
வரிச் சேமிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. ஆனால், இது சரியாகத் திட்டமிடுபவர்களுக்கு மட்டுமே.

கடைசி நிமிடம் வரை வரிச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யாமல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கும் சிலர் தள்ளப்படக்கூடும். நடப்பு நிதி ஆண்டின் இறுதி காலாண்டு இது என்பதால் இப்போது வரி சேமிப்புக்கு தேவையான முதலீடுகளைச் செய்ய இதுவே சரியான நேரம். எனவே பலரும் அறியாத சில வரிச் சேமிப்பு முறைகளை இங்கு பார்ப்போம்.

மழலையர் பள்ளி கட்டணம்


மழலையர் பள்ளி கட்டணத்திற்கு மட்டும் வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி கீழ் விலக்கு பெற முடியும். இதுவும் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே பெற்றோர் இருவரும் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வரி விலக்கைப் பெறலாம்.

மூத்த குடிமக்களாக உள்ள பெற்றோர் உதவியுடன் வரிவிலக்கு பெறும் முறை


உங்கள் பெற்றோரின் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் உங்கள் பணத்தையும் சேர்த்து முதலீடு செய்யும்போது வட்டியாகக் கிடைத்த லாபத்தில் 50,000 ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.

வீட்டுக் கடன் பெற்று இருக்கும்போது அதற்கு உங்கள் பெற்றோர் பணம் கொடுத்து உதவியிருந்தால் அதை திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டித் தொகைக்கும் சரியான ஆதாரங்களை சமர்ப்பித்து வரி விலக்கு பெற முடியும்.
Loading...
மேலும் உங்கள் பெயரில் எந்த ஒரு வீடும் இல்லாமல் பெற்றோர் பெயரில் உள்ள வீட்டில் தங்கி வந்தால், அவர்களுக்கு வீட்டு வாடகை செலுத்துவதாகவும் கணக்கு காண்பித்து வரி விலக்கு பெறலாம். ஆனால் இதற்கு வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீது போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரீமியம் செலுத்துதல்


பெற்றோருக்காக மருத்துவக் காப்பீட்டின் பிரீமியத்தை செலுத்துகிறீர்கள் என்றால் 50,000 ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது அதற்கான ரசீது மற்றும் பிற ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

பழைய வரி சேமிக்கும் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்வது?


வரி சேமிக்க அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்கெனவே வரிச் சேமிப்பு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால் அதன் ஒரு பகுதியை திரும்பப் பெற்று மீண்டும் முதலீடு செய்து வரியை சேமிக்கலாம். பிபிஎஃப் திட்டத்தில் 7 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால் இடையில் குறிப்பிட்ட அளவிலான பணத்தைத் திரும்பப் பெற அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று வரி சேமிக்கும் ELSS திட்டத்திலும் இடையில் குறிப்பிட்ட அளவிலான பணத்தைத் திரும்பப் பெற்று மீண்டும் முதலீடு செய்ய முடியும்.

மேலும் படிக்க: ஆடைகளில் மறைத்து ரூ. 8 கோடி தங்கத்தை கடத்திய கொரிய பெண்கள்
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்