வட்டி விகிதம் குறைப்பு: வீட்டுக் கடன் வட்டி எவ்வளவு குறையும்?

ரெப்போ வட்டி குறைப்புக் காரணமாக, வீட்டுக்கடன், வாகனக் கடன் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

Tamilarasu J | news18
Updated: February 7, 2019, 6:19 PM IST
வட்டி விகிதம் குறைப்பு: வீட்டுக் கடன் வட்டி எவ்வளவு குறையும்?
வீட்டுக் கடன்
Tamilarasu J | news18
Updated: February 7, 2019, 6:19 PM IST
வங்கிகள் வாங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி குறைப்பு, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டால், வீட்டுக்கடன் வட்டி எவ்வளவு குறையும் என்பதைப் பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் 6-வது நாணயக் கொள்கைக் கூட்டம் மும்பையில் இன்று (07/02/2019) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘‘வங்கிகள் வாங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தில் தான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி குறைப்புக் காரணமாக, வீட்டுக்கடன், வாகனக் கடன் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

உதாரணமாக, ஒருவர், 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி, அதை 10 ஆண்டுகளில் செலுத்தத் திட்டமிட்டிருந்தால், தற்போது செலுத்தும் மாத தவணை 33 ஆயிரத்து 725 ரூபாயாக இருக்கும், ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பு முழுமையாக வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டால், மாத தவணை 32 ஆயிரத்து 76 ரூபாயாகக் குறையும். அதாவது மாதம் 1639 ரூபாய் தவனையில் குறையும்.

ஒருவர், 50 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கி, அதை 20 ஆண்டுகளில் செலுத்தத் திட்டமிட்டிருந்தால், தற்போது செலுத்தும் மாத தவணை 47 ஆயிரத்து 705 ரூபாயாக இருக்கும், வட்டியை வங்கிகள் குறைத்தால் , மாத தவணை 45 ஆயிரத்து 955 ரூபாயாகக் குறையும். அதாவது மாதம் 1750 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.

ஒருவர், 75 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கி, அதை 25 ஆண்டுகளில் செலுத்தத் திட்டமிட்டிருந்தால், தற்போது செலுத்தும் மாத தவணை 66 ஆயிரத்து 665 ரூபாயாக இருக்கும், வட்டியை வங்கிகள் குறைத்தால் , மாத தவணை 64 ஆயிரத்து 488 ரூபாயாகக் குறையும். அதாவது மாதம் ஆயிரத்து 2 177 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.

இது மட்டுமல்லாது, விவசாயிகளுக்குப் பிணையில்லாமல் வழங்கும் கடன் அளவு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் எளிதில் கடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் பார்க்க: கேபிள், டிடிஎச் புதிய கட்டணம்... மக்களே இனி எஜமானர்!
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626