ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஒரு கிராம் தங்கம் ரூ.6000 வரை போகலாம்.. கணிக்கும் வல்லுனர்கள்.. 2023ல் ஷாக் கொடுக்குமா தங்கம், வெள்ளி விலை?

ஒரு கிராம் தங்கம் ரூ.6000 வரை போகலாம்.. கணிக்கும் வல்லுனர்கள்.. 2023ல் ஷாக் கொடுக்குமா தங்கம், வெள்ளி விலை?

தங்கம்

தங்கம்

2023ல் தங்கம் வெள்ளி விலை ஷாக் கொடுக்க வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 31ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் 40,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஆனால் கடந்த சனிக்கிழமை மாலை தங்கம் கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ரூ.5130க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு ரூ 120ம் உயர்ந்து 41,040 ரூபாய் விற்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரு பவுன் 41 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

இந்த விலையேற்றம் புத்தாண்டையொட்டி தங்கம் வாங்க நினைக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இந்த தொடர் விலையேற்றத்தால் தினமும் தங்கத்தின் விலை எவ்வளவு உயருகிறது என பொதுமக்கள் பார்த்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள். இதற்கு முன்பு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 41 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gold, Gold Price, Gold rate