முகப்பு /செய்தி /வணிகம் / கொரோனவிற்கு பின் இந்தியாவில் அதிகம் கவனம் ஈர்த்த லைஃப் இன்ஷூரன்ஸ் பிளான்!

கொரோனவிற்கு பின் இந்தியாவில் அதிகம் கவனம் ஈர்த்த லைஃப் இன்ஷூரன்ஸ் பிளான்!

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மக்களை அதிகம் ஈர்த்து உள்ளன.

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மக்களை அதிகம் ஈர்த்து உள்ளன.

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியமா என்பது தொடர்பான சமீபத்திய சர்வேயில் பங்கேற்ற சுமார் 91% இந்தியர்கள், மிகவும் முக்கியம் என்று நினைக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிட் 19 தொற்று முற்றிலுமாக உலகை விட்டு அகலாத நிலையில், கடந்த இரண்டாண்டு காலத்தில் இந்தியாவில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மக்களை அதிகம் ஈர்த்து உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் பெருந்தொற்றுக்கு பிறகு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மீதான மக்களின் பார்வை முற்றிலும் மாறியது தான். கொரோனா காலத்தில் கொத்துக்குத்தாக ஏற்பட்ட மரணங்களை கண்முன் பார்த்த பலர் தங்கள் வாழ்க்கை மற்றும் சுற்றத்தாரின் வாழ்க்கையை நிதி ரீதியாக பாதுகாக்கவும், வருமானத்திற்கான மாற்று வழிகளை உருவாக்கவும் முடிவு செய்தது நாட்டில் காப்பீட்டுத் துறையை மறுவரையறை செய்ய தூண்டியது.

தொற்றுக்கு பிறகான லைஃப் இன்ஷூரன்ஸ் பற்றிய மக்களின் பார்வையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கான தேவையையும் அதிகரிக்கச் செய்தது. லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியமா என்பது தொடர்பான சமீபத்திய சர்வேயில் பங்கேற்ற சுமார் 91% இந்தியர்கள், ஆம் லைஃப் இன்ஷூரன்ஸை மிகவும் முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர். இதன் மூலம் முன்பு லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது முதலீடாகப் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தங்கள் வாழ்வைப் பாதுகாக்கும் ஒன்றாக மக்கள் பார்ப்பது தெளிவாகிறது.

Also Read : மக்கள் அதிகம் பயன்படுத்த டோலோ 650 இலவசமாக கொடுக்கப்பட்டதா? நடந்தது என்ன?

இந்த சர்வேயினை நடத்திய பெனோரி (Benori Knowledge) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குப்தா கூறுகையில், டயர் 2 மற்றும் அதற்குக் கீழ் உள்ள நகரங்களில் லைஃப் இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெருந்தொற்றுக்கு பிறகு மிகவும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் இங்கே பல குடும்பங்கள் தங்களின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்கிய நபர்களைத் தொற்றுக்குப் பறி கொடுத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயுள் காப்பீட்டுத் துறையின் முகம் மாற்றம் (Changing Face of Life Insurance Industry) என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட சர்வே குறித்த அறிக்கையைச் சமீபத்தில் Benori Knowledge வெளியிட்டது. அந்த அறிக்கையில் லைஃப் இன்ஷூரன்ஸ் துறையானது 2017 - 2022 காலகட்டத்தில் CAGR-ல் 11% வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் CAGR-ல் 9% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தனியார்த் துறை சந்தை பங்கு 2017-ல் 28 சதவீதமாக இருந்த நிலையில், 2022-ல் 38 சதவீதமாக அதிகரித்துள்ள அதே நேரம் இந்தியாவில் லைஃப் இன்ஷூரன்ஸ் பெனட்ரேஷன் ( Life Insurance penetration), கடந்த டிசம்பர் 2021 -ல் 3.2% ஆக உயர்ந்து, இந்தியாவை உலகளவில் 10-வது லைஃப் இன்ஷூரன்ஸ் மார்கெட்டாக மாற்றியது. டேர்ம் இன்சூரன்ஸ் போன்ற நான்-பார் ப்ரொட்டக்ஷன் ப்ராடக்ட்ஸ் (Non-Par Protection products) மிகவும் பிரபலமடைந்து வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளுக்கு இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆஷிஷ் குப்தா கூறி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் பெருந்தொற்று பாதிப்புகள் தான் என்றும் குறிப்பிட்டார்.

Also Read : சாமானிய மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ...எந்த வங்கியில் கிடைக்கும்? முழு விபரம்!

2 அல்லது அதற்கு மேற்பட்ட ப்ராடக்ட்ஸ் அல்லது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நிகழ்வைப் பூர்த்தி செய்யும் ப்ராடக்ட்ஸ் போன்று, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையை வழங்கும் திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் மார்க்கெட்டை ஆக்கிரமித்திருக்கும் என்றார். லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வேகமாகப் பதிவுசெய்யப்பட்ட அண்டர்ரைட்டிங் மூலம் விரைவாக ஆன்போர்டிங்கை வழங்க ஆஷிஷ் குப்தா அறிவுறுத்தி உள்ளார். மேலும் தற்போது இருப்பதை விட கிளைம் செட்டில்மென்ட் ப்ராசஸ் தேவை என்றார்.

First published:

Tags: Covid-19, Insurance, Life Insurance