வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் முதலில் இதை செய்யுங்கள்!

பென்சன் பிளான்கள்

கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கும்

 • Share this:
  pension schemes savings plans : வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பிரதான் மந்திரி வய வந்தனா திட்டம் எப்படி கைகொடுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்.

  நமக்காக இளம் வயதில் ஓடி ரத்தம் சுண்டி, தோல் சுருங்கி 60 வயதை கடந்த பெரியவர்கள் உங்கள் வீட்டில் இருக்கிறார்களா? அவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறதா? அப்போ இந்த செய்தி உங்களுக்கானது.

  மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் மற்ற பென்சன் திட்டங்களை விட நல்ல லாபம் பார்க்கலாம். வட்டி விகிதம் 7.4 சதவீதம், வருடாந்திர அடிப்படையில் இத்திட்டத்தில் 7.66 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது.

  also read வங்கிகள் ஏலம் விடும் வீடுகளை வாங்கினால் உங்களுக்கு தான் லாபம் தெரியுமா?

  மாதாந்திர ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.62 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். காலாண்டு ஓய்வூதியத்திற்கு ரூ.1.61 லட்சம், ஆறு மாதங்களுக்கு ரூ.1.59 லட்சம். சரியாக 10 ஆண்டுகள் கழித்து மாதம் மாதம் பென்சன் பெறலாம். இப்போது நீங்க முதலீடு செய்தால் சரியாக 10 ஆண்டுகள் கழித்து முதியவர்கள் பென்சன் பெற தொடங்குவார்கள். இப்போது உங்கள் தாய் தந்தையினருக்கு 50 வயது என்றால் 60 வயது முதல் அவர்களின் பென்சன் காலம் தொடங்கும்.

  10 வருடத்திற்கு பின்பு முதலீட்டாளர் உயிரோடு இருந்தால், கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கும். பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு முழு முதலீட்டுத் தொகையும் கிடைக்கும். முதலீட்டு காலத்தின் மூன்று ஆண்டுகளில் கடன் பெறும் வசதியும் இதில் உண்டு. சரியாக திட்டமிடுங்கள் உங்கள் பெற்றோர்களின் வாழ்வை சுகமாக்குங்கள். மேலும் விபரங்களுக்கு ஆன்லைனில் இது குறித்து தேடலாம் அல்லது வங்கிகளிலும் விசாரிக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: