ஓய்வுகாலம் குறித்து முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலமாக பெரும் லாபங்களை நீங்கள் அடைய முடியும். சிறப்பான திட்டங்களில் இணைவதன் மூலமாக உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் எதிர்கால பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.
மார்க்கெட்டில் கவர்ச்சிகரமான நீண்ட கால சேமிப்புத் திட்டங்கள் நிறையவே இருக்கின்றன. அவை உங்கள் ஓய்வுகால திட்டங்களுக்கான கதவை திறப்பதாக அமையும். அதுபோன்ற திட்டங்களில் ஒன்று தான் தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்). மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒய்வூதியம் மற்றும் முதலீடு இணைந்த திட்டம் இதுவாகும்.
Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
பாதுகாப்பான மற்றும் மார்க்கெட் அடிப்படையில் ஒழுங்கு அமைக்கப்பட்ட லாபங்கள் கிடைப்பதன் மூலமாக முதுமை பருவத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உங்கள் மனைவி இல்லத்தரசியாக இருக்கும் பட்சத்தில், முதுமை வயதில் அவர் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இருக்காமல், தன்னிறைவோடு வாழும் வகையில் இந்தத் திட்டத்தில் இணையலாம். நீண்ட கால முதலீட்டு திட்டத்திற்கான வாய்ப்பு மற்றும் இலக்கு ஆகியவற்றை தேசிய ஓய்வூதியத் திட்டம் வழங்குகிறது. இதில், மாந்திர முதலீடு எவ்வளவு என்பதை நீங்களே முடிவு செய்து பணம் செலுத்துவதன் மூலமாக, அதன் மெச்சூரிட்டி காலத்தில் நல்ல லாபத்தை பெற முடியும்.
Gold Loan : கம்மியான வட்டியில் எந்த வங்கியில் நகைக் கடன் கிடைக்கும்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
மனைவியின் 30ஆவது வயதில் இந்தத் திட்டத்தில் இணையலாம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், குறைந்தபட்சம் உங்கள் மனைவியின் 30ஆவது வயதில் இணையும் பட்சத்தில் மிகுந்த லாபங்களை பெற முடியும்.
மாதாந்திர பங்களிப்பு - ரூ.5,000
எதிர்பார்க்கப்படும் லாபம் - 10 சதவீதம்
மெச்சூரிட்டி காலத்தில் இருக்கும் மொத்த ஓய்வூதிய நிதி - ரூ.1,11,98,471
ஆனுய்டி திட்டத்தில் சேர ரூ.44,79,388
ஆனுய்டி திட்டத்தின் மீது 8 சதவீத வட்டி சேர்ப்பு - ரூ.67,19,083
மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.44,793
திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்
இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் சமயத்தில் நீங்கள் 18 முதல் 65 வயது உடையவராக இருக்க வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒருவர் ஒரு அக்கவுண்ட் திறப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. அதே சமயம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு அக்கவுண்ட் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு அக்கவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியாது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே அக்கவுண்டில் சேர முடியும். உதாரணத்திற்கு, உங்கள் மனைவியை இந்தத் திட்டத்தில் இணைக்கிறீர்கள் என்றால், அக்கவுண்ட் அவர் பெயரில் மட்டுமே இருக்கும். அவருக்காக நீங்கள் மாதாந்திர ப்ரீமியம் செலுத்தலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.