தினமும் ரூ. 50 சேமிப்பதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 33 லட்சம் வரை உங்களுக்கு சொந்தமாக்கும் மிகச் சிறந்த தேசிய பென்சன் திட்டம் குறித்து தான் பார்க்க போகிறோம்.
இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய திட்டம் தான் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய பென்சன் திட்டம். வருங்காலத்தில் உதவும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டமான இந்த பென்சன் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் பணத்திற்கு முழு பாதுகாப்பையும் அரசு தரும். கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் தற்போது யாரு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். நல்ல வருவாயையும் பெறலாம். கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் சேர வயது வரம்பு என்பது 18 முதல் 65 வயது வரை ஆகும்.தற்போது இந்த திட்டத்தில் முதலீடு செய்யபவர்களுக்கு 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச்சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் சேர நினைத்தால் முதலில் இதில் இருக்கும் 2 விருப்பத்தேர்வுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, டையர் 1, டையர் 2. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் டையர் 2 பிரிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்புப் பணத்தை எடுக்கலாம். டையர் 1 பிரிவில் முதிர்வு காலம் முடிந்த பின்பு தான் எடுக்க முடியும்.
இப்போது வட்டி மற்றும் முதலீடு குறித்த விவரங்களை பார்க்கலாம். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு என்பது மிக மிக குறைவான தொகை தான். நீங்கள். ரூ. 50 தினமும் சேமித்தால் கூட போதும் அதுவே மாதத்துக்கு ரூ. 1500 வந்துவிடும். மொத்தம் 35 ஆண்டுகளுக்கு சேமித்தால் நீங்கள் முதலீடு செய்யும் மொத்தத் தொகை ரூ.6.30 லட்சம். வட்டி வாயிலாக உங்களுக்குக் கிடைப்பது ரூ.27.9 லட்சம். மொத்தம் ரூ. 33 லட்சம் வரை நீங்கள் லாபம் பெறலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பதேர்வுகள் பொருத்து மாதம் மாதம் பென்சனாக இந்த தொகையை பெற முடியும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.