முகப்பு /செய்தி /வணிகம் / பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்.. இனி எல்லாமே ஈஸி தான்!

பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்.. இனி எல்லாமே ஈஸி தான்!

பென்சன்

பென்சன்

புதிய அமைப்பின் மூலம் 73 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் நேரடியாக பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அது அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.  ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு சாதகமாக ஒரு சில பென்ஷன் விதிகள் மாறப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து பென்ஷன்தாரர்களுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது மாறியுள்ள புதிய விதிகளின்படி 73 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் மிகப்பெரிய பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

ஓய்வூதியத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம். வேலையிலிருந்து பணி ஓய்வு பெறும் போது, அரசாங்கம் மாதா மாதம் பென்ஷன் வழங்குவதற்காக பிராவிடன்ட் ஃபண்ட் உடன் பென்ஷனுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும். PF கணக்கு, அதாவது வைப்பு நிதிக்கு என்று தனிப்பட்ட கணக்கு ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இருக்கும்.

ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு மூலம் தேவைப்படும்போது சரியான காரணத்திற்காக அதில் இருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியும். அதே போல, பென்ஷன் கணக்கும் இருந்தாலும், அதை பென்ஷன் வாங்குபவர்களே ஹேண்டில் செய்வதற்கான அமைப்பு இல்லை. எனவே, PF கணக்குகள் ஒருங்கிணைப்பதைப் போலவே, ஒரு மத்திய பென்ஷன் விநியோகிக்கும் அமைப்பை உருவாக்குவதாக ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.

’வங்கி’ என்ற வார்த்தையை ரெப்கோ பயன்படுத்த தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி!

ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திற்கான நிதியை நிர்வகிப்பதற்கான ஒரு தனிப்பட்ட அமைப்பை உருவாக்கி அதை எப்படி விநியோகிக்க வேண்டும் என்று பற்றி விவாதிப்பதற்கு இந்த மாதம் ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 73 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் நேரடியாக பலன் பெறுவார்கள்.

தற்போது நாடு முழுவதும் 130 பிராந்திய PF அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு தொடங்கப்படும் பொழுதே அவருடைய பிஎஃப் அலுவலகம் எந்த பகுதியில், எந்த எந்த ஊரில் இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதே அலுவலகங்கள் தான் ஓய்வூதியக்காரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியை முடிவு செய்து அந்தத் தேதியில் தகுதியுள்ள நபர்களுக்கு பென்ஷன் வழங்கும். எனவே ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு பகுதிக்கும் பென்ஷன் வழங்கும் தேதி என்பது வெவ்வேறாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!

ஒருசில ஊரில் ஒன்றாம் தேதியே பென்ஷன் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்; சிலருக்கு பத்தாம் தேதிதான் பென்ஷன் கிடைக்கும்; மாத இறுதியில் 25 ஆம் தேதி பென்ஷன் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு ஓய்வூதியக்காரர்களுக்கு வெவ்வேறு தேதியில் பென்சன் வழங்கும் முறையை மாற்றி அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பென்சன் வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒரு தனிப்பட்ட பென்ஷன் விநியோகிக்கும் அமைப்பை கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பின் கீழ் பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்றும், ஒரே நேரத்தில் 73 லட்ச ஓய்வூதியக்காரர்களுக்கும் அவரவர் வங்கி கணக்குகளில் அவருக்கு சேர வேண்டிய தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப வசதியால் ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய ஓய்வூதிய விநியோகிக்கும் அமைப்பு கடந்த ஆண்டே ஒப்புதல் பெறுவதற்காக முன்மொழியப்பட்டது. இந்த சென்ட்ரலைஸ்டு அமைப்பு, எல்லாவிதமான போலி கணக்குகளையும் நீக்கி, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட PF கணக்குகள் இருந்தால் அதை ஒருங்கிணைத்து, அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிதாக மாற்றும்.

கடந்த மாதம், பென்ஷன் மற்றும் பென்ஷன் வாங்குபவர்கள் நல சங்கம், இந்த ஒருங்கிணைந்த பென்ஷம் வழங்கும் அமைப்பிற்கு, SBI உடன் இணைத்து செயல்படும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே உள்ள பென்ஷன் போர்டல், வங்கி உருவாக்கும் மத்திய பென்ஷன் போர்ட்டலுடன் ஒருங்கிணைத்து, ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு பெரிய அளவில் உதவும். அதே போல, ஆண்டு தோறும் வழங்க வேண்டிய லைஃப் சர்டிபிகேட்டை டிஜிட்டல் தளம் வழியாகவும், முகம் வழியே உறுதிப்படுத்தல் செயல்முறையும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Govt Scheme, Pension Plan, PF