Home /News /business /

அரசு வேலை பார்த்த ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வயதில் மட்டும் கூடுதல் பென்ஷன்!

அரசு வேலை பார்த்த ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வயதில் மட்டும் கூடுதல் பென்ஷன்!

பென்சன்

பென்சன்

பென்ஷன் விதிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசு வேலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வருவது ரிட்டயர்மென்டிற்கு பிறகு அவர்கள் வாங்கும் பென்ஷன் பணம் தான். மத்திய அரசின் கீழ் அரசு வேலைகளில் பணியாற்றிய பிறகு மத்திய அரசு வழங்கும் பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர் ஒரு குறிப்பிட்ட வயதுகளை எட்ட எட்ட அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவு (compassionate allowance) கணிசமாக அதிகரிக்கும்.

    மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது 80, 85, 90, 95 மற்றும் 100 வயதுகளை எட்டியவுடன் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். சென்ட்ரல் சிவில் சர்விஸ் (பென்ஷன்) 2021 விதிகளின்படி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக மாறிய பிறகு அதாவது 80 வயதை நிறைவு செய்த பிறகு, ஏற்கனவே வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவுடன் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

    மாதம் ரூ.9,250 வரை பென்சன் கிடைக்கும்.. அரசு தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

    சூப்பர் சீனியர் பென்ஷனர்களுக்கான ஓய்வூதிய அதிகரிப்பு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

    சூப்பர் சீனியர் பென்ஷனர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் 80 வயதிற்கு பிறகு ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும். இதன்படி

    80 வயது முதல் 85 வயது வரை - அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 20% அதிகரிப்பு

    85 வயது முதல் 90 வயது வரை - அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 30% அதிகரிப்பு

    90 வயது முதல் 95 வயது வரை - அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 40% அதிகரிப்பு

    95 வயது முதல் 100 வயது வரை - அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 50% அதிகரிப்பு

    கடன் பெற சிபில் ஸ்கோர் முக்கியம்.. அதை இலவசமாக செக் செய்யலாம் தெரியுமா?

    100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் - அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 100% அதிகரிப்பு வழங்கப்படும்.

    அதே போல விதிகளின்படி சூப்பர் சீனியர் பென்ஷனர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் கருணை கொடுப்பனவு அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலண்டர் மாதத்தின் முதல் நாளிலிருந்தே செலுத்தப்படும். இதற்கு உதாரணத்தையும் இங்கே பார்ப்போம். மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் ஒருவர் 1942 ஆகஸ்ட் 15-ல் பிறந்திருந்தால் 2022, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதலே கூடுதல் அடிப்படை ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர் ஆவார். அதே போல 3 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிச் சேவையின் (qualifying service) நீளத்தை கணக்கிடும் போது, 6 மாதாந்திர காலம் நிறைவடைந்ததாக கருதப்பட்டு குறிப்பிட்ட ஓய்வூதியதாரரின் தகுதிச் சேவையாக கருதப்படுகிறது.

    திருத்தப்பட்ட சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் (பென்ஷன் ) விதிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. இந்த விதிகள் கடந்த 2003 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். தற்போது அமலில் உள்ள இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் உறுப்பினர்கள், Contributory provident Fund-க்கு தகுதியுள்ள நபர்கள் உள்ளிட்ட சிலருக்கு பொருந்தாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, Pension Plan

    அடுத்த செய்தி