வேலையை விட்ட பின்பு மாதம் ரூ. 5000 பென்சன் வேண்டுமா? அதுக்கு ரூ. 210 இருந்தால் போதும்!

பென்சன் திட்டம்

ஒருவேளை உங்களுக்கு 20 வயது என்றால் மாதம் ரூ .248 க்கு முதலீடு செய்ய வேண்டும்

 • Share this:
  நீங்கள் வேலையை விட்ட பிறகு மாதம் ரூ. 5000 பென்சன் வேண்டுமா? அப்ப நீங்க ரூ 210 முதலீடு செய்தால் போதும்.

  பென்சன் என்பது கண்டிப்பாக முதுமை காலத்தில் தேவைப்படும் ஒன்று. அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்சன் கிடைக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனாலும் தங்கள் ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் வேண்டும் என நினைக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அப்படியான ஒரு திட்டம் குறித்து தான் பார்க்க போகிறோம்.

  ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை உறுதி செய்யும் திட்டங்களில் ஒன்று தான் அடல் பென்ஷன் யோஜனா. சம்பளதாரர்களுக்கு ஓய்வூதியம் என்பது அவசியமான ஒன்று அப்படி மாதம் பென்சன் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இளமையிலே அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்குகள். அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மற்றும் 18-40 வயதிற்குள் இருக்கும் எந்த இந்தியனும் இந்த திட்டத்தில் சேரலாம். முதலீடு செய்தவர்கள் 60 வயதை அடைந்தவுடன் இந்த திட்டத்தின் கீழ் பென்சன் பெறுவார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாதம் ரூ 210 முதலீடு செய்வதன் மூலம் ரூ .5,000 ஓய்வூதியம் பெறலாம். இதில் 2 ஆப்ஷன் உள்ளது மாதம் 1,000 ரூபாய் அல்லது அதிகபட்சம் 5,000 ரூபாய். இதில் எந்த பென்சன் திட்டம் வேண்டுமோ அதை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம். மாதம் ரூ. 5000 பெற வேண்டும் என்றால் 18 வயதில் மாதம் 210 ரூ முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். வயதுக்கு ஏற்ப மாதம் முதலீடு மாறுப்படும். ஒருவேளை உங்களுக்கு 20 வயது என்றால் மாதம் ரூ .248 க்கு முதலீடு செய்ய வேண்டும். 25 வயது என்றால் ரூ .376 க்கு முதலீடு செய்ய வேண்டும்.

  60 வயதுக்கு பின்பு உங்களுக்கு பென்சன் வர தொடங்கும். முதலீட்டாளர்கள் இறந்துவிட்டு மனைவி மட்டும் இருந்தால் அவருக்கு அந்த பென்சன் வழங்கப்படும். இல்லையெனில் நாமினிக்கு முழுத் தொகையும் வழங்கப்படும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: