ஒவ்வொரு மாதமும் நிலையான பென்சன் கண்டிப்பாக உங்கள் முதுமையை சந்தோஷமாக்கும். எப்படி பெறுவது என்ற விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பென்சன் அருமை கண்டிப்பாக இளமையில் தெரியாது. வயதான பிறகு பண தேவைக்காக பிறரின் உதவியை நாடும் போது பென்சன் தேவை புரியும். அதிலும் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவராக இருந்தால் கவலையில்லை, தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்து ஓய்வு பெறுபவர்கள் கண்டிப்பாக உங்கள் வாழ் நாள் சேமிப்பாக ஏதாவது ஒரு பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து வையுங்கள். கண்டிப்பாக உதவும்.
அந்த வகையில் இன்று ஒரு முக்கியமன பென்சன் சேமிப்பு திட்டம் குறித்து இங்கே பார்க்க போகிறோம். மாதம் ரூ. 10,000 பென்சன் பெற வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டத்தில் தாரளமாக தயங்காமல் முதலீடு செய்யலாம். அடல் பென்சன் யோஜனா திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதில் ஆரம்பத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மட்டுமே முதலீடு செய்து வந்தனர். ஆனால் தற்போது அப்படியில்லை. எல்லோரும் தங்களது வருங்காலத்திற்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள இந்தியக் குடிமகன் யாரேனும் முதலீடு செய்து வருவாய் பெறலாம். சரியாக உங்களுக்கு 60 வயது ஆன உடனே மாதம் மாதம் பென்சன் வர தொடங்கும். இந்த திட்டத்தில் சேர வங்கி அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கணக்கு வைத்திருந்தால் போதும். முதலீடு தொகையை பொருத்தவரையில் மிக மிக குறைவு உங்கள் வயதை பொருத்தே உங்களின் முதலீடும் கணக்கிடப்படும். அதாவது 60 வயதில் இருந்து
பென்சன் பெற 18 வயதில் இருந்தே பிரீமியம் மாதம் மாதம் செலுத்தினால் போதும்.
புரியும்படி குறிப்பிட்டால் 18 வயதில் நீங்கள்
முதலீடு செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 210 ரூபாய் செலுத்தினால் போதும். மாதம் ரூ. 1000 முதல் 5000 வரை பென்சன் பெறலாம். அதுவே 30 வயதுக்குக் குறைவாக இருக்கும் கணவன் - மனைவி இருவரும் ஒவ்வொரு மாதமும் ரூ.577 பிரீமியம் செலுத்தினால் மாதம் ரூ. 10,000 வரை பென்சன் பெறலாம். இதுவே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். அதுமட்டுமில்லை இந்த பென்சன் திட்டத்தில் .1.5 லட்சம் வரையில் வரிச் சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.