60 வயதில் மாதம் ரூ.30,000 பென்சன் வேண்டுமா? தினம் ரூ.150 சேமிக்க தொடங்குங்கள் போதும்!

பென்சன் திட்டங்கள்

60 சதவீதம் பணத்தை எடுத்தப்பின் 40 சதவீதத்தை வருடாந்திர முதலீட்டில் வைக்க வேண்டும்.

 • Share this:
  20 டூ 40 வயது வரை நன்கு உழைத்துவிட்டு 60 வயதில் வீட்டில் இருக்கும் ஓய்வு காலத்தில் ரூ.30,000 வரை பென்சன் பெற மிகச் சிறந்த திட்டம் ஒன்று உள்ளது. அதுக்குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

  ஓய்வுதியம் என்பது கண்டிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவசியமான ஒன்று. ஆடி ஓய்ந்து வீட்டில் அமரும் நேரத்தில் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் மாதம் பென்சன் அவர்களை வாழ வைக்கும். யாரை நம்பியும் அவர்கள் சார்ந்து இல்லாமல் தனது சேமிப்பால் அவர்களின் பண தேவையை பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் இளம் தலைமுறையினராக இப்போது வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கொஞ்சம் நேரம் எடுத்து இந்த பதிவை படியுங்கள்.

  NPS இந்த திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு முதலீடு திட்டம்.இதில் PPF அல்லது EPF ஐ விட சற்றே அதிக வருவாயை நீங்கள் பெறலாம். அதிலும் அதிகமான வட்டியையும் நீங்கள் இதில் பெற முடியும்.

  also read.. போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பில் கூட ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் இருக்கு! தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க

  இப்போது உங்களுக்கு 25 வயது என எடுத்து கொள்ளுங்கள் 60 வயதில் பென்சன் கிடைக்க, தினமும் ரூ. 150 சேர்த்து மாதம் ரூ. 4500 முதலீடு செய்யுங்கள் . இதுப்போல் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், குறைந்தது 8% என்ற விகிதத்தில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஓய்வு பெறும்போது, ​​உங்கள் மொத்த ஓய்வூதிய சொத்து ரூ.1 கோடியாக இருக்கும். அப்புறம் என்ன தின கூலியான நீங்கள் கோடிஸ்வரன் தான். இதிலும் இன்னொரு பெனிஃபிட்டும் உள்ளது. என்ன தெரியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீங்கள் பணத்தை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடியாது. 60 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை நீங்கள் வருடாந்திர முதலீட்டு திட்டத்தில் வைக்க வேண்டும், அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். 60 சதவீதம் பணத்தை எடுத்தப்பின் 40 சதவீதத்தை வருடாந்திர முதலீட்டில் வைக்க வேண்டும். அதற்கு வட்டி 8%. அப்படியென்றால், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ .27,353 ஓய்வூதியம் கிடைக்கும். முதுமையை பணச்சுமை இல்லாமல் கடக்கலாம்.

  இனியும் லேட் செய்யாதீர்கள் உடனே இந்த திட்டம் குறித்து தெளிவாக விசாரித்து சேமிக்க தொடங்குகள். உங்கள் முதுமை வாழ்வை இனிமையாக்குங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: