தம்பதியினர் 60 வயதைத் தொட்டபின் பென்சன் வர பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.
இளமையில் சம்பாதித்து முதுமையில் அமர்ந்து சாப்பிடுவது தான் இனிமையான வாழ்க்கை. நீங்கள் கைநிறைய சம்பாதிக்கும் போதே எதாவது ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து வைத்து விடுங்கள். அப்போது தான் முதுமையில் சொந்தங்கள், ரத்த பந்தகங்கள் உங்களை கைவிட்டாலும் பென்சன் உங்களை வாழ வைக்கும். கல்யாணம் ஆன தம்பதியினர் தங்களின் வருங்காலத்திற்காக பென்சனை தேர்ந்தெடுக்க இதோ சிறந்த வழி.
பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டம்.இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே மூத்த குடிமக்களுக்குமுதுமையில் பாதுகாப்பு வழங்குவதுதான்.
எல்ஐசி நிறுவனம் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். இதில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.40% வட்டி கிடைக்கிறது. முதலீட்டாளர்கள் 60 வயதைத் தொட்டபின் பென்சன் வரத் தொடங்கும்.மொத்தமாக குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் சுமார் 9250 ரூபாய் பென்சன் கிடைக்கும். முதலீட்டாளர் இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் சென்றுசேரும். கணவன் மனைவி இருபாலரும் ஜாயின் அக்கவுண்டில் சேரலாம்.
மாதம் வட்டியுடன் சேர்ந்து பென்சன் வந்து விடும். அதுமட்டுமில்லை உங்கள் நாமினிக்கு உங்கள் முதலீடு ,நீங்கள் இறந்த பின் சேர்ந்துவிடும். மிகவும் பாதுகாப்பான சிறந்த திட்டம். யோசிக்காதீங்க உடனே முடிவு எடுங்கள். நேரடியாக LIC இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.