30 வயதின் தொடக்கத்தில் இருப்பவர்கள் மிகச் சிறந்த பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்குங்கள். கண்டிப்பாக பியூச்சரில் கைக்கொடுக்கும்.
எல்.ஐ.சி போன்ற மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைப்பது மிகச் சிறந்த முடிவாகும். காப்பீட்டு திட்டங்கள் அல்லது பென்சன் திட்டங்கள் என உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி சேமிப்பு என்பது என்றுமே கைக்கொடுக்கும் ஒன்று தான். சமீப காலமாக பிக்சட் சேமிப்பு, ஆர் டி சேமிப்புகளை காட்டிலும் பெரும்பாலான மக்கள் பென்சன் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்துக்கின்றனர். அதற்கு காரணம், பென்சன் திட்டங்களில் வாழ்நாள் முழுவதும் வருவாய் பெறலாம் அல்லது நாமினியும் பயனடையலாம் என்பதால் தான். அந்த வகையில் பலரின் தேர்வாக இருக்கும் எல்.ஐ.சி மிகச் சிறந்த பென்சன் திட்டங்களில் ஒன்றான ஜீவன் சாந்தி திட்டம் குறித்த விரிவாக தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பென்சன் திட்டங்களிலேயே மிகவும் சிறப்பான ஒரு திட்டமாக ஜீவன் சாந்தி ஸ்கீம் செயல்பட்டு வருகிறது. இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம், ஒருவர் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையான முழு உத்தரவாதத்துடன் கூடிய பென்சன் தொகையை பெறலாம். இந்த திட்டத்தில் தேவைக்கேற்ப 2 விருப்பத்தேர்வுகளும் உள்ளன. Immediate Annuity மற்றும் Deferred Annuity. இந்த 2 விருப்பத்தேர்வுகள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். Immediate Annuity திட்டத்தை நீங்கள் தொடங்கிய உடனேயே பென்சன் பெறும் வசதி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுவே Deferred Annuity ஸ்கீமில் சேர்ந்த பிறகு 5, 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பென்சன் கிடைக்கும். உங்களின் தேர்வை பொறுத்து நீங்கள் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். எல்.ஐ.சியில் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்தில் ஒருவர் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை இருக்கும் காலக்கட்டத்தில் தொடங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில்
குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்து மாதம் மாதம் பென்சன் பெறலாம். அதிகபட்சம் தொகை என்பது வரையறை இல்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தலாம்.
சரியாக நீங்கள் ரூ. 1,50,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேர்கிறீர்கள் என்றால் வருடத்திற்கு உங்களுக்கு ரூ. 12,000 பென்சன் கிடைக்கும். வாழ்நாள் முழுவது நீங்கள் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவீர். உங்கள் முதலீடு பொறுத்து பென்சன் தொகை மாறுபடும். அதிகமான தொகை என்றால்
பென்சன் தொகையை அதிகரிக்கும். இந்த திட்டத்தை ஆஃபலைன் மற்றும் ஆன்லைனிலும் தொடங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
எல்.ஐ.சி முகவரை தொடர்புகொள்ளவும். சரியாக 30 வயதில் நீங்கள் நல்ல பென்சன் திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய தொடங்கினால் வருங்காலத்தில் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவருக்கும் அது உதவலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.