முகப்பு /செய்தி /வணிகம் / 80 வயதுக்கு மேல் பென்சன் பெறுபவர்கள் கூடுதல் உதவித்தொகை கிடைக்க இதை செய்யுங்கள்!

80 வயதுக்கு மேல் பென்சன் பெறுபவர்கள் கூடுதல் உதவித்தொகை கிடைக்க இதை செய்யுங்கள்!

பென்சன்

பென்சன்

பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 50% சேர்த்து வழங்கப்படும்.

  • Last Updated :

ஓய்வூதியம் பெறுபவர்களில் மிகவும் வயதானவர்களுக்கு அரசாங்கம் கூடுதல் நன்மைகளை வழங்க முடிவெடுத்தது. குறிப்பாக 75+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல்நல கோளாறுகள் வயது காரணமாக அதிகமாகும். அதேபோல் அவர்களின் தேவைகளும் அதிகரிக்கும். இதற்காக அவர்களுக்கு பொருளாதார ரீதியான ஆதரவு தேவைப்படும். இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பென்ஷன் தொகையை வழங்கும் என்று அறிவிப்பை மேற்கொண்டது.

இது ஓய்வூதியக்காரர்களுக்கும். குடும்ப பென்ஷன் வாங்கும் நபர்களுக்கும் பொருந்தும். இந்தத் தொகை கூடுதல் பென்ஷன் தொகை என்று அழைக்கப்படுகிறது. இது எண்பது வயதுக்கு மேற்பட்ட பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. தனி நபர் ஓய்வூதியக்காரராக இருந்தாலோ அல்லது குடும்ப பென்ஷன் வாங்கும் நபராக இருந்தாலோ CCS பென்ஷன் விதிமுறைகள் 1972 இன் அடிப்படையில் இவர்களுக்கு எண்பது வயதுக்கு மேற்பட்டு கூடுதல் பென்ஷன் தொகை வழங்கப்படும்.

FD : இன்னும் 2 நாட்களில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் கை மேலே பலன் !

எந்த மாதம் பிறந்தநாள் வருகிறதோ அந்த மாதத்தின் முதல் தேதியில் இருந்தே இந்த கூடுதல் தொகை அவர்களின் ஓய்வூதிய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத் துறையின், மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகம், நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் கடந்த மார்ச் 31, 2022 அன்று ஆஃபீஸ் மெமோராண்டாம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் பென்ஷன் தொகை பற்றிய விதிகள் பற்றி விவரங்கள் உள்ளன. தனி நபராக ஓய்வூதியம் பெறுபவர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இருவருக்கும், அரசு நிர்ணயித்துள்ள விகிதங்களின்படி கூடுதல் பென்ஷன் தொகை செலுத்த வேண்டும்.

கூடுதல் பென்ஷன் தொகை பின்வரும் விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும்:

1. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 80 முதல் 85 வயதுக்குள் இருந்தால், கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 20% சேர்த்து வழங்கப்படும்.

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

2. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 85 முதல் 90 வயதுக்குள் இருந்தால், கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 30% சேர்த்து வழங்கப்படும்.

3. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 90 முதல் 95 வயதுக்குள் இருந்தால், கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 40% சேர்த்து வழங்கப்படும்.

4. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 95 முதல் 100 வயதுக்குள் இருந்தால், கூடுதல் பென்ஷன் தொகையாக அடிப்படை பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் தொகையில் 50% சேர்த்து வழங்கப்படும்.

5. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வாங்கும் நபரின் வயது 100 க்கு மேல் இருந்தால், 100% பென்ஷன் சேர்த்து வழங்கப்படும்.

பென்ஷன் அலுவலக பதிவுகளில் ஓய்வூதியம் வாங்கும் நபரின் பிறந்த தேதி இல்லை என்றால், ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர், 80 வயதை பூர்த்தி செய்த ஆண்டின், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கூடுதல் பென்ஷன் அல்லது குடும்ப பென்ஷன் வழங்கப்படும். இதுவே. அடுத்தடுத்த கட்டங்களில் பின்பற்றப்படும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: National Pension Scheme, Pension Plan